இந்தியாவில் ரயில் விபத்து, 100 வரை பலி

இந்தியாவில் இன்று ஞாயிறு காலை 3:00 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்றுக்கு 100 மேற்பட்டோர் பலியாகியும், 200 வரையானோர் காயமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்து Indore நகரில் இருந்து பீகார் மாநிலத்து Patna நகர்வரை செல்லும் Indore-Patna Express என்ற ரயிலே இவ்வாறு உத்தர பிரதேச மாநிலத்து கான்பூர் நகரில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியது. தடம்புரண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. . இவ்விபத்தில் குறைந்தது 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டு உள்ளன. காயமடைந்தோர் கான்பூர் […]

தென் சூடான் மீது ஆயுத தடை, கேட்பது அமெரிக்கா

உலகின் மிகவும் இளைய நாடான தென் சூடான் மீது ஐ. நா. ஆயுத தடை நடைமுறை செய்யவேண்டும் என்று அமெரிக்கா இன்று வியாழன் கூறியுள்ளது. அமெரிக்காவுக்கான ஐ. நா. தூதுவர் சமந்தா பவர் (Samantha Power) என்பவரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். . இங்கே வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் தென் சூடானை முன்னைய சூடானில் இருந்து பிரித்து ஒரு நாடாக்க முன்னின்று செயல்பட்டது அமெரிக்காவே. . 2011 ஆம் ஆண்டுவரை தற்போதைய சூடானும், தற்போதைய தென் சூடானும் […]

ICC அமைப்பிலிருந்து ரஷ்யாவும் வெளியேறியது

ரஷ்யா சர்வதேச குற்ற நீதிமன்றம் (ICC) என்ற அமைப்பில் இருந்து வெளியேறுவதாக இன்று புதன் கூறியுள்ளது. இவ்விடயம் சார்பாக கருத்து தெரிவித்த ரஷ்யாவின் வெளிவிவகார அதிகாரி ஒருவர், ICC உண்மையில் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல என்றும், ICC அமைப்புக்கு தேவையான பலம் இல்லை என்றும் கூறியுள்ளார். . ஆனால் ரஷ்யாவின் வெளியேற்றத்துக்கு காரணம், அண்மையில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட Crimea பகுதியில் செய்துகொண்ட சட்டவிரோத நடவடிக்கைள் என்று கருதப்படும் செயல்களை விசாரிக்க முற்பட்டதே என்று நம்பப்படுகிறது. […]

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா யுத்த குற்றம்?

2003-05-01 முதல் 2014-12-31 வரையான காலத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் படைகளும், CIAயும் யுத்த குற்றங்களை செய்திருக்கலாம் என்று International Criminal Court (ICC) கூறியுள்ளது. . இன்று திங்கள் (2016-11-14) ICCயின் தலைமை வழக்கறிஞர் Fatou Bensouda இந்த கருத்தை தெரிவித்து உள்ளார். ஆப்கானித்தானில் இடம்பெற்றது என கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கான அடிப்படை விசாரணைகளை மேற்கொண்ட இவர், தான் விரைவில் ICC நீதிபதிகளை அணுகி இக்குற்றங்களை ஆழமாக விசாரிக்க அனுமதி கேட்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். . 2003 முதல் 2014 […]

வெட்டுக்கிளி உண்டார் Prof. Sam Wong PhD

. மூன்றாம் உலகநாட்டு சாதாரண மக்கள், குறிப்பாக ஆண்கள், தேர்தல் காலங்களில் அனாவசியமான பந்தயங்களில் ஈடுபட்டு, பின்னர் தோல்வி காரணமாக தலைக்கு மொட்டை அடைத்தல், பாதி மீசையை சவரம் செய்தல் போன்ற காரியங்களை செய்வது உண்டு. ஆனால் அவ்வகை போட்டி ஒன்றில் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஈடுபட்டு, பின் தோல்வியுற்று, அதன் காரணமாக வெட்டுக்கிளி ஒன்றை தொலைக்காட்சி ஒன்றின் முன்னிலையில் உண்று உள்ளார். . அமெரிக்காவின் New Jersey […]

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி Trump

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ரம் (Donald Trump) தெரிவு செய்யப்படு உள்ளார். இவர் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாவார். இவர் Republican கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றாலும், இவர் வழமையான Republican அமைப்புக்கு (establishment) வெளி நபர் ஒருவரே. . Democrats கட்சி சார்பிலும் பேர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) என்றவர் அக்கட்சிக்குள் பெரும் ஆதரவுடன் இருந்து வந்திருந்தாலும், ஹெலரி கிளின்டன் (Hillary Clinton) உட்கட்சி (establishment) ஆதரவு காரணமாக சாண்டர்ஸை பின்தள்ளி அக்கட்சி சார்பில் போட்டியிட்டு […]

அயலவன் கோழியை நம்பி அடைக்கு வைக்காதே

யாழ்பாணத்து வலம்புரி பத்திரிகை “சூரன் போரின் தத்துவத்தை உணர்ந்து கொள்மினே!” என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை 2016-11-05 அன்று வெளியிட்டு உள்ளது. இதில் சொல்லப்பட்டு உள்ள கருத்தையிட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. . இந்த தலையங்கம் (இலங்கை) “தமிழர்களும் வல்லமைமிக்க அமெரிக்கா, இந்தியா  போன்ற நாடுகளைச் சிக்கனப் பிடித்து எங்களுக்கு உரிமை கிடைத்தால் உங்களுக்கு என்ன நன்மை என்பதை எடுத்துரைத்து, சீனாவின் பிரசன்னத்தைக் காட்டி, முன்னைய ஆட்சி மீண்டு(ம்) வந்தால் நிலைமை என்னவாகும் […]

America’s Biggest Foreign Policy Miscalculation

America’s Biggest Foreign Policy Miscalculation

By Elavalagan America is ready and willing to move production of its F-16 fighter jet, the Fighting Falcon, to India. And it appears India too is considering it. This move wouldn’t just be a move to low-cost manufacturing. Instead it would be a full-scale transfer-of-technology move. This idea would be unimaginable about 40 years ago, […]

பாலஸ்தீனியரை கைவிட்டு இஸ்ரவேலை நெருங்கும் மோதி

மிக நீண்ட காலமாக இந்தியா ஒரு பாலஸ்தீனியார் ஆதரவு நாடாகவே இருந்து வந்துள்ளது. பாலஸ்தீன் தனது சொந்த நாட்டை அடைவதை இந்தியா 1988 ஆம் ஆண்டிலேயே ஆதரித்து இருந்தது. இந்தியாவே PLOவை ஆதரித்த முதலாவது அரபு நாடு அல்லாத நாடு. ஆனால் அமெரிக்க ஆதரவுடன் இந்தியாவை வளர்க்க முனையும் இந்திய பிரதமர் மோதி காலத்தில் இந்திய-இஸ்ரவேல் உறவு பலமடைந்து வருகின்றது. . இந்த மாதம் 15 ஆம் திகதி இஸ்ரவேலின் ஜனாதிபதி Reuven Rivlin 6-நாள் உத்தியோகபூர்வ […]

இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு 28 பேர் பலி

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று செவ்வாய் இடம்பெற்ற மோதல்களுக்கு 7 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதற்கு ஒருநாள் முன், திங்கள் அன்று இடம்பெற்ற தாக்குதலுக்கு 6 பாகிஸ்தான் பொதுமக்களும் 1 இந்திய படையினரும் பலியாகி இருந்தனர். . அண்மையில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆயுத குழு ஒன்று 19 இந்திய இராணுவ வீரரை கொலை செய்தபின் இரண்டு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை தொடர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் காஸ்மீர் எல்லைப்பகுதிகளில் 28 பொதுமக்களும் […]