FIFA உதைபந்தாட்ட விளையாட்டு நிகழ்வுகளை நிர்வகிக்கும் பொறுப்பை அமெரிக்க சனாதிபதி ரம்பின் குடும்பத்துக்கு தாரைவார்க்க ரம்புடன் நெருக்கமான உறவை கொண்ட FIFA அதிபர் Gianni Infantino முயற்சி செய்கிறார். அது மட்டுமன்றி ரம்ப் குடும்ப நிர்வாகத்தில் தனக்கும் ஒரு நிரந்தர பதவியை உருவாக்க முனைகிறார் Infantino. ரம்பின் மருமகன் Kushner உட்பட பல செல்வந்தர்கள் $20 பில்லியன் முதலீடு செய்து ஆரம்பிக்கும் FIFA Forward Enterprise என்ற நிறுவனம் FIFA நிகழ்வுகளை நிர்வகிக்கும் என்பதே திட்டம். இந்த […]
ஸ்பெயின் (Spain) இந்த ஆண்டுக்கான FIFA World Cup கேடயத்தை 1-0 goal விகிதத்தில் வென்று உள்ளது. இதனுடன் போட்டியிட்ட ஆர்ஜென்டீனா (Argentina) இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. ஸ்பெயின் 2010ம் ஆண்டும் FIFA World Cup கேடயத்தை வென்று இருந்தது. ஆர்ஜென்டீனா 1978, 1986, 2022ம் ஆண்டுகளில் கேடயத்தை வென்று இருந்தது. இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து 6 goal களையும் பிரான்ஸ் 4 goal களையும் பெற்றதால் இங்கிலாந்து 3ம் இடத்தை […]
ஜூலை 1ம் திகதி அமெரிக்காவுக்கும், Bosnia and Herzegovina வுக்கும் இடையில் இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின்போது அமெரிக்க அணியின் Folarin Balogun என்பவருக்கு அவரின் தடை செய்யப்பட்ட விளையாடல் (foul play) காரணமாக Red Card தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. Red Card தண்டனை விதிக்கு அமைய Balogun அடுத்த போட்டியில் பங்கெடுப்பது தடை செய்யப்பட்டது. இதை விரும்பாத அமெரிக்க சனாதிபதி ரம்ப் உடனே FIFA தலைவர் Gianni Infantino வுடன் தொடர்பு கொண்டு Balogun மீதான தடையை நீக்க […]
இத்தாலியில் பெப்ரவரி மாதம் 6ம் திகதி ஆரம்பித்த Milano Cortina 2026 என்ற பெயர் கொண்ட 2026ம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 22ம் திகதியுடன் முடிவடைந்தன. இம்முறை 41 பதக்கங்களை வென்ற நோர்வே முதலாம் இடத்திலும், 33 பதக்கங்களை வென்ற அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 20 பதக்கங்களை வென்ற நெதர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. ரஷ்யா யூக்கிறேனில் செய்த யுத்த குற்றங்களுக்காக ரஷ்யாவை தடை செய்திருந்த ஒலிம்பிக் அமைப்பு காசாவில் இஸ்ரேல் செய்த யுத்த குற்றங்களுக்காக இஸ்ரேலை […]
நீச்சல் உலகை கலக்கி வருகிறார் சீன நீச்சல் வீராங்கனையான 12 வயது Yu Zidi. வியாழக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற 2025 World Aquatic Championship போட்டியில் Yu Zidi யின் 4×200 மீட்டர் freestyle relay அணி பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது. Yu Zidi இறுதி போட்டியில் நீந்தவில்லை என்றாலும் இவரின் அணி இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த போட்டியில் நீந்தியவர் என்பதால் இவருக்கும் பதக்கம் உண்டு. இந்த பதக்கம் மூலம் இவர் அதி குறைந்த வயதில் மேற்படி […]
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற அரை மரதன் (half marathon) போட்டியில் He Jie முதலாம் இடத்தை அடைந்து $5,500 பரிசை பெற்றுள்ளார். ஆனால் அவரின் வெற்றியில் சீனர் சந்தேகம் கொண்டுள்ளனர். இவருக்கு சில அடிகள் பின்னால் வந்த 3 ஆபிரிக்கர் இறுதி கட்டத்தில் முழுமூச்சுடன் ஓடாது சீனர் வெல்ல வழி செய்திருக்கலாம் என்று கருத வைக்கிறது. முடிவுக்கு சில மீட்டர் தூரம் இருக்கையில் ஒரு ஆபிரிக்கர் சீனரை முன்னோக்கி செல்லுமாறும், இன்னோர் ஆபிரிக்கரை மெதுவாக ஓடுமாறும் […]
Shohei Ohtani என்ற ஜப்பானிய baseball வீரர், வயது 29, அமெரிக்காவின் Dodgers அணியில் 10 ஆண்டுகளுக்கு விளையாட $700 மில்லியன் ஊதியம் பெறுகிறார். விளையாட்டு துறையில் இது மிகப்பெரிய ஊதியமாகும். தற்போது Los Angeles நகரத்தில் உள்ள Angeles அணி சார்பில் விளையாடும் இவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு Dodgers சார்பில் விளையாடுவர். இவர் பந்தை எறிதல் (pitch), பந்தை அடித்தல் (bat) இரண்டிலும் வல்லமை கொண்டவர். ஆனால் முழங்கையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக […]
கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 போட்டிகளில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ ஆகியன 4 அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றை அடைந்து உள்ளன. இந்த நாலு அணிகளும் தம்முள் போட்டியிட அதில் மூன்று அணிகள் 1ம், 2ம், 3ம் இடங்களை வெற்றி அடையும். மேற்படி 4 அணிகளுக்கும் இடையிலான அரையிறுதி போட்டிகள் டிசம்பர் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் இடம்பெறும். அரையிறுதியில் தோல்வியுறும் 2 அணிகளுக்கிடையில் 3ம் அணிக்கான போட்டி 17ம் திகதி இடம்பெறும். அரையிறுதியில் வெல்லும் […]
பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகம் கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 உதைபந்தாட்ட போட்டியில் பங்கு கொள்ளும் 32 நாட்டு அணிகளின் வல்லமை தரவுகளை கணினிகளில் புகுத்தி Artificial Intelligence முறைமையில் வெற்றிகளை கணித்து இருந்தது. ஆனால் அந்த கணிப்பில் வெற்றி பெறும் என்று கணித்த 16 அணிகளில் 8 அணிகள் மட்டுமே முதல் சுற்றில் வெற்றி பெற்று உள்ளன. அதனால் Oxford கணிப்பின் நம்பகத்தன்மை 50% ஆக மட்டுமே உள்ளது – அது நாணயம் ஒன்றை வீசி தலையா, […]
2026ம் ஆண்டுக்கான FIFA உதைபந்தாட்ட போட்டிகள் இடம்பெறவுள்ள அமெரிக்க, மெக்ஸிக்கோ, கனடிய நகரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2026ம் ஆண்டிலேயே முதல் தடவையாக 3 நாடுகள் FIFA போட்டிகளை வைக்க உள்ளன. அந்த நகரங்கள் பின்வருமாறு: கனடா: Toronto, Vancouver Mexico: Guadalajara, Monterrey, Mexico City அமெரிக்கா: Atlanta, Boston, Dallas, Houston, Kansas City ,Los Angeles, Miami, New York, Philadelphia, San Francisco, Seattle மொத்தம் 80 போட்டிகளில் 10 போட்டிகள் கனடாவிலும், […]