சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இடம்பெற்ற Winter 2022 ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங் நேரப்படி இன்று ஞாயிறு நிறைவு பெறுகின்றன. கரோனா மத்தியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பார்வையாளர் இன்றி இந்த போட்டிகள் இடம்பெற்றன. நோர்வே 16 தங்க பதக்கங்களையும் 8 வெள்ளி பதக்கங்களையும், 13 பித்தளை பதக்கங்களையும் வென்று முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி 12 தங்க பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும், சீனா 9 தனங்க பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்திலும் உள்ளன. 2018ம் ஆண்டு இடம்பெற்ற […]
அமெரிக்கரான 32 வயது Jeremy Smith Beijing 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் hockey அணியின் goalie ஆக விளையாடினார். வியாழக்கிழமை அமெரிக்க அணிக்கும் Jeremy Smith அங்கம் வகிக்கும் சீன அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா 8 க்கு 0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டது. ஆனாலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜெர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியில் ஜெர்மனி 3 புள்ளிகளை பெற, சீனா 2 புள்ளிகளை பெற்றது. சீன hockey […]
வெள்ளிக்கிழமை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகவுள்ள 2022 Winter ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து Arif Khan என்ற ஒருவர் மட்டுமே செல்கிறார். இவர் ஒரு காஸ்மீர் வாசி. இந்தியா ஒரு வெப்பமான மத்திய கோட்டு நாடு என்றாலும், காஸ்மீர் போன்ற இமயமலையை அண்டிய வடக்கு மாநிலங்கள் பல winter விளையாட்டுகளை பழக வசதியான இடங்கள். ஆனாலும் இந்தியாவில் இருந்து ஒருவர் மட்டுமே winter ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார். இவரை 6 அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். Arif […]
இந்த மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள Australian Open என்ற டென்னிஸ் போட்டியில் பங்கு கொள்ள சென்ற Serbia நாட்டு வீரரான Novak Djokovic அஸ்ரேலியாவுள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இவர் திருப்பி அனுப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இவரிடம் உரிய விசா இருந்தாலும், விசா விதிக்கு இணங்க கரோனா தடுப்பு ஊசி பெற்றமைக்கான ஆதாரங்களோ அல்லது சட்டப்படி விதிவிலக்கு பெற்ற ஆவணங்களோ இருந்திருக்கவில்லை. கடந்த ஆண்டு இவர் கரோனா தடுப்பு ஊசிக்கு எதிராக கருத்து தெரிவித்து […]
கரோனா வைரசின் தாக்கத்தின் மத்தியில், ஒரு ஆண்டு காலம் பின் தள்ளப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஞாயிறு நிறைவு பெற்றன. அமெரிக்கா 39 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 113 பதக்கங்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆனாலும் அமெரிக்கா எதிர்பார்த்ததிலும் 16 பதக்கங்கள் குறைவாகவே பெற்று உள்ளது. சீனா இறுதிவரை அதிக தங்க பதக்கங்களை கொண்டிருந்தாலும் இறுதி நாளில் அமெரிக்கா ஒரு தங்க பதக்கத்தை சீனாவிலும் அதிகமாக பெற்று உள்ளது. சீனா எதிர்பார்த்ததிலும் […]
இந்தியாவின் Neeraj Chopra இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டில் (javelin) தங்க பதக்கம் பெற்றுள்ளார். Tokyo 2020 போட்டியில் இவர் ஈட்டியை 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை அடைந்து உள்ளார். Neeraj Chopra, வயது 23, ஒரு இராணுவத்தினர். இவர் இந்தியாவின் Rajputana Rifles என்ற இராணுவ அணியில் உள்ளார். இதுவே இந்தியாவின் முதல் ‘athletics’ தங்க பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 தங்க பதக்கங்களை வென்று இருந்தாலும், அவை […]
இன்று வியாழன் இடம்பெற்ற ஆண்களுக்கான field hockey ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தை அடைந்து பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது. ஜெர்மனியை தோற்கடித்தே இந்தியா இந்த பதக்கத்தை வென்றுள்ளது. முதலாம் இடத்தில் பெல்ஜியமும், இரண்டாம் இடத்தில் அஸ்ரேலியாவும் உள்ளன. தற்போது இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 பித்தளை பதக்கங்களாக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. 1900ம் ஆண்டு முதல் இந்தியா 33 பதக்கங்களையே வென்றுள்ளது. அதில் 12 பதக்கங்கள் field hockey விளையாட்டுக்கே கிடைத்தன. முற்காலங்களில் […]
கரோனா வரைஸ் தாக்கத்தின் மத்தியிலும் இன்று வெள்ளிக்கிழமை (23/07/2021) பின்போடப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை போட்டிகளை நேரடியாக காண பார்வையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் மூலமே போட்டிகள் ஆவலரை அடையும். ஆரம்ப விழாவின் வாணவேடிக்கையும் தொலைக்காட்சிக்கு பொருந்தும் வகையிலேயே இடம்பெற்றது. பங்குகொள்ளும் நாடுகளின் அணிவகுப்பும் 5,700 பேரை மட்டுமே கொண்டிருந்தது. 2016ம் ஆண்டு போட்டியில் 16,000 க்கும் அதிமானோர் அணிவகுத்து இருந்தனர். ஜூலை 1ம் திகதி முதல் ஒலிம்பிக் வளாகத்தில் மட்டும் […]
சீனாவில் Zhang Ziyu என்ற 14 வயது மாணவி தற்போது 2.26 மீட்டர் (7 அடி 5 அங்குலம்) கொண்டவளாக உள்ளார். ஒரு கூடைப்பந்து விளையாடும் இவர் Yao Ming என்ற முன்னாள் சீன கூடை பந்தாட்ட வீரனை நினைவு கொள்ள வைக்கிறார். Yao Ming முன்னாள் வீரர் 2.29 மீட்டர் (7 அடி 6 அங்குலம்) உயரம் கொண்டவர். ஏனைய கூடை பந்தாட்ட வீரர் துள்ளி, பாய்ந்து பந்தை கூடைக்குள் போடும் நிலையில், Zhang Ziyu […]
இன்று இடம்பெற்ற Euro 2020 உதைபந்தாட்ட இறுதி போட்டியில் இத்தாலி முதலாம் இடத்தை வென்றுள்ளது. அதனுடன் மோதிய இங்கிலாந்து இரண்டாம் இடத்தை அடைந்து உள்ளது. கரோனா காரணமாக Euro 2020 இந்த ஆண்டே இடம்பெற்றது. ஆட்டம் ஆரம்பித்து 2 நிமிடங்களில் இங்கிலாந்து தனது 1வது புள்ளியை (goal) பெற்றது. இத்தாலி 67 நிமிடங்களின் பின் தனது 1ம் புள்ளியை பெற்றது. ஆனால் 90 நிமிடங்களின் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் பின்னரும் 1:1 என்ற நிலையிலேயே புள்ளிகள் இருந்தன. […]