சர்வாதிகாரி ஜெனரல் Noriega மரணம்

1983 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டுவரை பனாமாவை (Panama) ஆண்ட சர்வாதிகாரி நோரியேகா (Manuel Noriega) திங்கள் இரவு பனாமா நகரில் உள்ள Santo Thomas வைத்தியசாலையில் காலமானார். இவர் ஆரம்பத்தில் CIAயின் கைக்கூலியாக இருந்து, பின் CIAயின் பகைமையால் அமெரிக்காவில் சிறை சென்றவர். . 1934 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1962 ஆம் ஆண்டில் பனாமா இராணுவத்தில் இணைந்து இருந்தார். 1968 ஆம் ஆண்டில் பனாமாவின் ஜெனரல் Omar Torrijos இராணுவ […]

எகிப்து கிறீஸ்தவர் மீது தாக்குதல், 26 பலி

எகிப்தில் இன்று வெள்ளிக்கிழமை IS ஆதரவு குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு குறைந்தது 26 கோப்ரிக் (Coptic) கிறீஸ்தவர்கள் பலியாகி உள்ளனர். அத்துடன் 25 பேர் காயமடைந்தும் உள்ளனர். . பஸ்களில் Minya என்ற சென்றுகொண்டிருந்த கிறீஸ்தவர் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. மூன்று வாகனங்களில் வந்த 8 முதல் 10 எண்ணிக்கையிலான IS ஆதரவு ஆயுததாரர் இந்த கொலையை செய்துள்ளார். . எகிப்து முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு என்றாலும், அங்கு சுமார் 10%மானோர் கிறீஸ்தவர் […]

அமெரிக்காவின் பாகிஸ்தான் உதவி மேலும் குறைப்பு

அமெரிக்காவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்திருந்த உதவி மேலும் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா $534 மில்லியன் உதவியை வழங்கி இருந்தது. ஆனால் டிரம்ப் அரசு 2008 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தானின் உதவியை $100 மில்லியன் ஆக குறைத்துள்ளது. அதையும் கடனாக வழங்குவதா அல்லது நன்கொடையாக வழங்குவதா என்று அமெரிக்கா இதுவரை முடிவு செய்யவில்லை. . அண்மை காலங்களில் அமெரிக்கா முன்னாள் எதிரி இந்தியாவுடன் உறவை அதிகரித்து, அதேவேளை முன்னாள் நண்பன் பாகிஸ்தானுடனான உறவை குறைத்தும் […]

இந்திய-ஜப்பான் கூட்டுறவில் இலங்கை LNG குதம்

இந்தியாவினதும், ஜப்பானினதும் கூட்டுறவில் உருவாகும் நிறுவனம் ஒன்று இலங்கையின் மேற்கு கரையோரத்தில் உள்ள கேரவலபிட்டிய (Kerawalapitiya) என்ற இடத்தில் இயற்கை வாயு (LNG அல்லது Liquefied Natural Gas) குதம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த முதலீட்டின் மொத்த பெறுமதி சுமார் $250 மில்லியன் என்று கூறப்படுகிறது. . இந்திய நிறுவனமான Petronet LNG Limited முன்னர் வருடம் ஒன்றில் 2-மில்லியன்-தொன் (2 MT) LNGயை இறக்குமதி செய்யும் குதம் ஒன்றை இலங்கையில் நிறுவ விரும்பியது. ஆனால் இலங்கை […]

இந்திய யுத்த விமானம் சீன எல்லையில் தொலைவு

இந்தியாவின் நவீன யுத்த விமானம் ஒன்று சீன எல்லை பகுதியில் தொலைந்து உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் Sukhoi SU-30 வகையான இந்த யுத்த விமானம் பயிற்சி ஒன்றின்போது தொலைந்து உள்ளது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் வடகிழக்கே உள்ள அசாம் மாநிலத்து Tezpur நகருக்கு வடக்கே சுமார் 60 km தூரத்தில் தொலைந்து உள்ளது. . உள்ளூர் நேரப்படி, செவ்வாய் காலை 10:00 மணியளவில் புறப்பட்ட இந்த விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளனர். சீன எல்லையை நோக்கி […]

UK Manchester அரங்கில் குண்டு தாக்குதல்

பிரித்தானிய Manchester நகரில் உள்ள Manchester அரங்கில் இன்று திங்கள் இரவு10:45 மணியளவில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் ஓன்றுக்கு பலர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை அந்த அரங்கில் 23 வயதுடைய பிரபல அமெரிக்க பாடகியான அரியானா கிராண்டே (Ariana Grande) நடாத்திய நிகழ்வு ஒன்றின்போதே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. . பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்து உள்ளதாக Manchester போலீசார் கூறி இருந்தாலும், பலியானோர், காயமடைந்தோர் தொகைகள் தற்போது வெயிடப்படவில்லை. அரியானாவுக்கும் எந்தவித ஆபத்தும் […]

வடகொரியா மீண்டும் ஏவியது ஏவுகணை

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை, உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு மாலை 5 மணியளவில், ஏவியுள்ளது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு இரண்டு அணுமின் சக்தியில் இயங்கும் விமானம் தங்கி கப்பல்களை தென் கொரிய கடலுக்கு அனுப்பிய பின்னர் இந்த இரண்டு ஏவுகணைகளையும் ஏவி உள்ளது வடகொரியா. . இன்று ஏவிய கணை சுமார் 560 km உயரம் சென்று வீழ்ந்துள்ளது. . சுமார் ஒரு கிழமைக்கு முன் வடகொரியா ஏவிய ஏவுகணை சுமார் 2000 km உயரம் […]

சீனாவுக்கான உளவாளிகளை இழந்தது CIA

இன்று சனிக்கிழமை அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான The New York Times வெளியிட்ட செய்தி ஒன்றின்படி, CIA சீனாவில் கொண்டிருந்த அனைத்து உளவாளிகளையும் இழந்து உள்ளதாம். சீன உண்மைகளையும், இரகசியங்களையும் CIAக்கு வழங்கி வந்திருந்த சுமார் 20 உளவாளிகள் 2011 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் திடீர்ரென மாயமாக மறைந்துள்ளனராம். . இந்த பத்திரிகைக்கு செய்திகளை வழங்கிய ஆனால் தமது பெயரை வெளியிட விரும்பாத சுமார் 10 தற்போதைய மற்றும் முன்னாள் […]

உலக சுகாதார அளவீட்டில் இலங்கை 85ஆம் இடத்தில்

உலக அளவில் நடாத்தப்பட்ட Healthcare Access and Quality Index (HAQ) இன்று வெள்ளி வெளியிட்ட கணிப்பில் இலங்கை 73 புள்ளிகளை பெற்று 85ஆம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள Andorra (சனத்தொகை 70,000) 95 புள்ளிகளையும், இரண்டாம் இடத்தில் உள்ள Iceland (சனத்தொகை 330,000) 94 புள்ளிகளையும் கொண்டுள்ளன. . இந்த ஆய்வு இலகுவில் குணப்படுத்தக்கூடிய 32 நோய்களுக்கு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மருத்துவம், அந்நோய்களுக்கு மரணமாவோர் எண்ணிக்கை ஆகிய கணிப்புக்களையும் உள்ளடக்கும். . […]

நான்கு தடவை முதலமைச்சர் வகுப்பு 12 சித்தி

இந்திய வட மாநிலமான ஹர்யானாவில் (Haryana) நான்கு தடவைகள் முதலமைச்சராக இருந்த Om Prakash Chautala தனது 82 ஆவது வயதில், சிறை தண்டனை ஒன்றை அனுபவிக்கும் காலத்தில், 12 ஆம் வகுப்பு சித்தியை அடைந்துள்ளார். . மேற்படி முன்னாள் முதலமைச்சர் தனது நாலாவது ஆட்சி காலத்தில் செய்த ஊழல் குற்றத்துக்கான 10 வருட சிறைவாசம் செய்கையிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளார். . 2013 ஆம் ஆண்டு புது டெல்லி நீதிமன்ற நிரூபிப்புப்படி இந்த முதலமைச்சர் எந்தவித […]

1 2 3