எண்ணெய் விலை மேலும் குறையும்

சவுதி அரேபியா மே மாதம் முதல் தமது நாள் ஒன்றுக்கான எண்ணெய் உற்பத்தியை மேலும் 600,000 பரல்களால் அதிகரிக்க உள்ளதாக இன்று திங்கள் கூறியுள்ளது. அவ்வாறு சவுதி தனது உற்பத்தியை அதிகரிப்பின், மே மாதம் முதல் சவுதி 10.6 மில்லியன் பரல்களை நாள் ஒன்றில் உற்பத்தி செய்யும். . ஏற்கனவே மிகையான எண்ணெய் உற்பத்தியை கொண்டுள்ள சந்தை சவுதியின் மேலதிக உற்பத்தியால் விலையை மேலும் கீழே தள்ளும். கொரோனா வைரசால் உலகம் முடங்கி உள்ளதாலும் எண்ணெய் பாவனை […]

கொரோனாவுக்கு 200,000 அமெரிக்கர் பலியாகலாம்?

நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்காதுவிடின் அமெரிக்கா சுமார் 200,000 பேரை கொரோனா வைரசுக்கு பலியாக்கலாம் என்று வைத்தியர் Anthony Fauci கூறியுள்ளார். இந்த வைத்தியரே ரம்ப் அரசின் கொரோனா எதிர்ப்பு நடவடிககைகளுக்கான தலைமை வைத்தியர். . இதுவரை ஏப்ரல் 12 ஆம் திகதி வரவுள்ள Easter தினத்தன்று அல்லது அதற்கு முன் அமெரிக்க வர்த்தகங்கள் மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறிய ரம்ப்  தற்போது ஏப்ரல் 30 ஆம் திகதிவரை வர்த்தக செயல்பாடுகளை முடக்க […]

மீண்டும் வடகொரியா ஏவுகணை ஏவியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தில் கவனத்தை வைத்திருந்தாலும், வடகொரியா இன்று மீண்டும் குறைந்தது ஒரு ஏவுகணையை ஏவி பரிசோதனை செய்துள்ளது. வடகொரிய நேரப்படி ஞாயிறு காலை இந்த ஏவலை வடகொரியா செய்துள்ளது. . கடந்த ஒரு மாத காலத்துள் வடகொரியா செய்து கொண்ட 6 வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இந்த மாதம் 9 ஆம் திகதி மட்டும் 3 ஏவுகணைகளை வடகொரியா ஏவி இருந்தது. பின் 27 ஆம் திகதி மேலும் 2 ஏவுகணைகளை […]

பெண் மிருகங்களும் அதிக காலம் வாழ்கின்றன

உலக நாடுகள் எங்கும் ஆண்கள் வாழும் காலத்திலும் அதிக காலத்துக்கு பெண்கள் வாழ்வது நாம் அறிவோம். ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி ஆண் மிருகங்களில் அதிக காலத்துக்கு பெண் மிருக்கங்கள் வாழ்கின்றனவாம். . மொத்தம் 101 மிருகங்களின் வாழ்க்கை காலங்களை ஆராய்ந்த பிரித்தானியாவின் University of Bath ஆய்வாளர்களே இந்த ஆய்வை Proceedings of the National Academy of Sciences என்ற வெளியீட்டில் விபரித்து உள்ளனர். . சராசரியாக ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் 8% […]

பிரித்தானிய பிரதமரையும் தொற்றியது கொரோன

பிரித்தானிய பிரதமர் Boris Johnson (வயது 55) ஐயும் கொரோனா வரைஸ் தொற்றி உள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனாலும் தான் தொடர்ந்தும் பிரதமர் பணிகளை தொடர உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். . பிரதமர் தனக்கு நேற்று வியாழக்கிழமை நோய்க்கான அறிகுறி தென்பட்டதாகவும், பரிசோதனைகள் அவருக்கு கொரோனா தொற்றியதை உறுதி செத்ததாகவும் கூறி உள்ளார். அதனால் தான் வீட்டில் இருந்து பணிபுரிய உள்ளதாக அவர் கூறியுள்ளார். . இதுவரை 578 பேர் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியாகி […]

அமெரிக்காவில் கொரோனா தொற்றியோர் தொகை அதிகம்

இன்றைய தவுகளின்படி உலகத்தில் அமெரிக்காவிலேயே அதிகம் பேர் கொரோனா வைரஸின் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்று அமெரிக்காவில் 82,404 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் 1,178 பேர் அமெரிக்காவில் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் குணமடடைந்தோர் தொகை 619 மட்டுமே. . சுமார் 330 மில்லியன் மக்களை கொண்ட அமெரிக்கா ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டிருக்கவில்லை. இந்த வைரஸ் மீது ரம்ப் அரசு கொண்டிருந்த உதாசீனமே அதற்கு […]

அமெரிக்க வேலைவாய்ப்பு இன்மை திடீர் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இன்மை (unemployment) கடந்த கிழமை என்றைக்கும் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது. இன்று வியாழன் அமெரிக்காவின் Department of Labor விடுத்த அறிக்கையின்படி கடந்த கிழமை 3.28 மில்லியன் ஊழியர்கள் தமது வேலைகளை இழந்து, வேலை இழப்புக்கான காப்புறுதி பணம் (unemployment insurance) பெற விண்ணப்பித்து உள்ளனர். . கடந்த கிழமை தமது வேலைவாய்ப்பை இழந்து காப்புறுதிக்கு விண்ணப்பித்தோரின் தொகை (3.28 million) இதுவரை கொண்டிருந்த அதி கூடிய 1982 […]

தாய்லாந்து நோயிலே, மன்னார் ஜெர்மனியிலே

தாய்லாந்து கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கையில், அந்நாட்டு அரசர் (King Maha Vajiralongkorn, வயது 67) ஜெர்மனியில் உள்ள மலை பகுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளார். இதனால் கோபம் கொண்டுள்ளார் சில தாய்லாந்து மக்கள். தம்முடன் இல்லாத மன்னர் எதற்கு என்று அவர்கள் வினாவுகின்றனர். . மன்னார் நாட்டில் இல்லாமை தொடர்பாக கருத்து கூற மறுத்த அரசு, பதிலாக மன்னரை அவதூறு செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரித்து உள்ளது. Puttipong Punnakanta என்ற அமைச்சர் மன்னரை […]

அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நெருக்கம், ரஷ்ய விருப்பம்?

இஸ்ரேலுடன் அரபு நாடுகள் மோதிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில், அன்றைய எண்ணெய் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் இஸ்ரேலின் உறவு நாடுகள் மீது எண்ணெய் ஏற்றுமதி தடையை விதித்தன. அதனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் எண்ணெய் விலை அதிகரிக்க அவற்றின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகின. . 1973 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா படிப்படியாக எண்ணெய் உற்பத்தியில் சுயாதீனம் அடைய முயற்சித்தது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி செலவு மிகவும் அதிகம் என்றாலும், வளர்ந்து வந்த உலக பொருளாதாரம் […]

மொசாம்பிக் கொள்கலனுள் 64 அகதிகள் பலி

ஆபிரிக்க நாடான மொசாம்பிகில் பார வாகனம் ஒன்று இழுத்து சென்ற கொள்கலம் ஒன்றை சோதனை இட்ட மொசாம்பிக் போலீசார் அதனுள் 64 உடல்களையும், 14 பேரை உயிருடனும் கைப்பற்றி உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் ஆண்கள். . எதியோப்பியா (Ethiopia) என்ற நாட்டின் ஆண்களே அகதிகளாக தென் ஆபிரிக்கா செல்ல முனைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. . அந்த பார வாகனத்தின் சாரதியும், அகதிகள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இனொருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  மேலும் சிலர் தேடப்பட்டு […]

1 2 3 4