$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

Gulnara Karimova என்பவர் முன்னாள் உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) தலைவரின் மூத்த மக்கள். 1989 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான தந்தையின் ஆட்சி காலத்தில் Gulnara பெருமளவு பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். குறிப்பாக அந்நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமை வழங்கி பெரும் பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். ஆனாலும் தந்தையுடன் கொண்ட முரண்பாடுகள் காரணமாக இவர் 2014 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவர் மீது உஸ்பேக்கிஸ்தானில் சுமார் $1 பில்லியன் ஊழல் […]

இந்திய குழுக்களுக்கு சீனா உதவுகிறது, மீண்டும் குற்றச்சாட்டு

இந்திய குழுக்களுக்கு சீனா உதவுகிறது, மீண்டும் குற்றச்சாட்டு

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் பிரிவினைக்காக போராடும் ஆயுத குழுக்களுக்கு சீனா ஆயுததங்கள் மற்றும் ஆயுத பயிற்சிகளை வழங்குவதாக தன்னை அடையாளம் செய்ய விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தி உள்ளார். அந்த குழுக்கள் தற்போது இந்திய படைகள் மீதான தாக்குதல்களை அதிகரித்து உள்ளன. சீனா நேரடியாக இந்திய குழுக்களுக்கு உதவாமல், இந்திய எல்லையோரம் பர்மாவில் உள்ளூர் ஆட்சி செய்யும் United Wa State Army (UWSA) என்ற குழு மூலமுமே உதவுகிறது என்கிறது இந்தியா. இந்தியாவின் […]

$1 மில்லியன் இலஞ்சம் பெற்ற இந்தோனேசிய அமைச்சர்

$1 மில்லியன் இலஞ்சம் பெற்ற இந்தோனேசிய அமைச்சர்

இந்தோனேசியாவின் social affair அமைச்சர் 15.5 பில்லியன் இந்தோனேசிய ருப்பியாய் (சுமார் $1 மில்லியன்) இலஞ்சம் பெற்று, அகப்பட்டு கொண்டார். அந்த அமைச்சரை அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். சனிக்கிழமை கைப்பற்றப்பட்ட மேற்படி இலஞ்ச பணம் 7 பயண பெட்டிகள், 3 தோள்பைகள், காகித உறைகள் என்பவற்றுள் இருந்தன என்று இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் Firli Bahuri கூறியுள்ளார். கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களை அமைக்கும் செயற்பாடுகளின்போதே இலஞ்சம் வழங்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு […]

ஐ. நா. போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

ஐ. நா. போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

கடந்த 3 ஆம் திகதி ஐ. நா. வில் இடம்பெற்ற வாக்கெடுப்பு ஒன்றின் முடிவுகளின்படி கஞ்சா (cannabis) போதைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. 1961 Single Convention on Narcotic Drugs இணக்கத்தின் Schedule IV பிரிவுக்கு அமைய கஞ்சா இதுவரை தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த தடையே தற்போது UN Commission on Narcotic Drugs (CDN) தளர்த்தி உள்ளது. டிசம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்தியா, அமெரிக்கா, அஸ்ரேலியா, கனடா, […]

டெல்கியில் உழவர் போராட்டம்

கடந்த ஒரு கிழமையாக தமது இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்த இந்திய உழவர் தற்போது தலைநகர் டெல்கிக்கு நகர்ந்து உள்ளனர். பல்லாயிரம் உழவர்கள் டெல்கியில் பல வீதிகளை மறித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் இந்திய மத்திய அரசு நடைமுறை செய்த 3 புதிய சட்டங்களை எதிர்த்தே இவர்கள் போராடுகின்றனர். நீண்ட காலமாக அரசு இந்திய உழவருக்கும், அறுவடைகளை கொள்வனவு பெரும் நிறுவனங்களுக்கும் இடையில் நடுவராக இருந்து விலையை நிர்ணயித்து வந்துள்ளது. ஆனால் புதிய […]

சந்திரனில் கொடி நடும் இரண்டாம் நாடு சீனா

சந்திரனில் கொடி நடும் இரண்டாம் நாடு சீனா

சந்திரனில் தமது தேசிய கொடியை நடும் இரண்டாவது நாடாக சீனா அமைத்துள்ளது. இன்று வியாழன் சீனாவின் Chang’e-5 சீன தேசிய கொடியை (2 m நீளம், 90 cm உயரம்) சந்திரனில் நாட்டி உள்ளது. 1969 ஆண்டு அமெரிக்காவின் Apollo 11 பயணத்தின்போது முதலாவது அமெரிக்க தேசிய கொடி சந்திரனில் நடப்பட்டது. இதுவரை அமெரிக்கா 6 கொடிகளை அங்கு நட்டு உள்ளது. தற்போது சந்திரனில் தரை இறங்கி, கல் மற்றும் மண் எடுத்து மீண்டும் பூமிக்கு வரும் […]

Boeing 737 MAX விமானம் மீண்டும் சேவையில்

Boeing 737 MAX விமானம் மீண்டும் சேவையில்

அமெரிக்காவின் Boeing நிறுவனம் தயாரிக்கும் 737 MAX வகை விமானம் ஒன்று நேற்று புதன் அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Dallas விமான நிலையத்தில் இருந்து அருகே உள்ள Oklahoma மாநிலத்தில் உள்ள Tulsa நகர் வரை பறந்து உள்ளது. சுமார் 45 நிமிட மேற்படி American Airlines பயணம் நிருபர்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட சிலருடன் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் American Airlines ஒரு 737 MAX விமானத்தை […]

பொதுமன்னிப்பு வழங்க ரம்ப் தரப்பு இலஞ்சம் பெற்றது?

பொதுமன்னிப்பு வழங்க ரம்ப் தரப்பு இலஞ்சம் பெற்றது?

வெள்ளைமாளிகை அல்லது ரம்பின் கட்சி இதுவரை பெயர் குறிப்பிடப்படாத குற்றவாளி ஒருவருக்கு இலஞ்சம் பெற்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு (presidential pardon) வழங்கியதா என்று கண்டறிய விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நீதி திணைக்களத்தால் (justice department) ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை தொடர்பான உண்மைகள் தற்போதே வெளிவந்து உள்ளன. சனாதிபதி ரம்ப் இந்த செய்தியையும் வழமைபோல் ‘fake news’ சாடியுள்ளார். கடந்த கிழமை ரம்ப் 2017 ஆம் ஆண்டு குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட […]

கடந்த ஆண்டே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளது

கடந்த ஆண்டே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளது

இந்த ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதிதான் சீனாவில் இருந்து வந்தவர் ஒருவர் மூலம் அமெரிக்காவில் கரோனா ஆரம்பித்தது என்றே இதுவரை நம்பப்பட்டது. ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதத்துக்கு முன்னரே அமெரிக்காவில் கரோனா இருந்துள்ளமை தற்போது அறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் ஜனவரி 17 ஆம் திகதி வரையான காலத்தில் அமெரிக்க செஞ்சிலுவை சங்கத்தால் இரத்த தானம் மூலம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ந்த அமெரிக்காவின் Centers for Disease […]

அமெரிக்க நுகர்வோர் சந்தையை முந்தவுள்ளது சீனா

உலகத்திலேயே மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ள அமெரிக்க நுகர்வோர் சந்தையை (consumer goods market) சீனாவின் நுகர்வோர் சந்தை விரைவில் பின்தள்ளும் என்று 2019 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கூறுகின்றன. 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நுகர்வோர் சந்தை $6.2 டிரில்லியன் ($6,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. அதே ஆண்டு சீனாவின் நுகர்வோர் சந்தை $6.0 டிரில்லியன் ஆக இருந்துள்ளது. வேகமாக வளரும் சீனாவின் நுகர்வோர் சந்தை தற்போது நிலவும் $200 பில்லியன் இடைவெளியை நிரப்பி, தொடர்ந்தும் […]