தலபானுக்கு ரஷ்யா உதவி, என்கிறது அமெரிக்கா

ஆப்கானித்தானில் அமெரிக்க/NATO படைகளுக்கு எதிராக போராடிவரும் தலபானுக்கு (Taliban) ரஷ்யா உதவுகிறது என்கிறது அமெரிக்கா. திங்கள்கிழமை ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்க/NATOபடைகளின் தளபதி ஜெனரல் John Nicholson இச்செய்தியை தான் பொய் என்று நிரூப்பிக்கவில்லை (I am not refuting that) என்றுளார். . அதேவேளை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Matti, செய்தி உண்மை என்றால் அது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றுளார். . இச்செய்தி, ரஷ்யா தலபானுக்கு ஆயுத, பண உதவிகளை செய்கிறது என்கிறது. 1980 ஆம் […]

தான Pianoவில் தங்க நாணயம்

மத்திய பிரித்தானியாவில் வாழும் தம்பதிகளாக Graham Hemmings, வயது 72, அவரது மனைவி Megan, வயது 65, தமது பியானோவை Shropshire என்ற இடத்தில் உள்ள Bishop’s Castle Community Collegeக்கு தானமாக வழங்கி இருந்தனர். அந்த pianoவை சீரமைக்க கல்லூரி 61 வயதுடைய Martin Backhouse என்பவரை அமர்த்தி இருந்தது. சீரமைப்பில் ஈடுபட்ட Martin அந்த பியானோவுள் 913 தங்க நாணயங்கள் இருந்ததை கண்டுள்ளார். . இந்த தங்க நாணயங்களின் உரிமையாளரை தேடும் பணி தோல்வியில் […]

அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது Emirates

Dubaiயின் Emirates விமான சேவை தனது அமெரிக்காவுக்கான சேவைகளை குறைக்கிறது. அமெரிக்காவின் டிரம்ப் அரசு இஸ்லாமிய நாட்டவர் மீதும், அங்கிருந்து அமெரிக்கா வருபவர் மீதும் பெரும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய பின், Emirates விமான சேவை மூலம் அமெரிக்கா செல்வோர் தொகை குறைந்துள்ளது. அதன் விளைவாகவே Emirates தனது சேவைகளை குறைத்துள்ளது. . Dubai நகரில் இருந்து நேரடியாக அமெரிக்கா பயணிப்பவர் iPad, laptop போன்ற உபகாரணங்களை தம்முடன் வைத்திருப்பதையும் (carry-on) அமெரிக்கா தடை செய்திருந்தது. . மே […]

ஜெஹோவாவுக்கு ரஷ்யாவில் தடை

Jehovah’s Witness என்ற அமைப்புக்கு ரஷ்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வமைப்பு ரஷ்யாவின் எந்தப்பகுதியிலும் செயல்பட கூடாது என்றும், அந்த அமைப்புக்கு உரிய சொத்துக்களை அரசிடம் கையளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது. . ரஷ்யாவில் இந்த மைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது என்று அரசால் கூறப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் பலம் மிக்க Russian Orthodox Church மேல்கூறிய அமைப்பை “destructive sect” என்று கூறியுள்ளது. பல நாடுகளில் இந்த அமைப்புக்கு எதிராக புகார்கள் எழுந்தாலும், ரஷ்யாவில் மட்டுமே இவ்வாறு […]

நைஜீரியாவின் மாடியில் மறைத்த $43 மில்லியன்

நைஜீரியாவின் Lagos நகரில் எவரும் குடியிருக்காத மாடி வீடு ஒன்றில் US$ 43 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் தாள்கள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இந்த அமெரிக்க தாள்களுடன் மேலும் 27 ஆயிரம் பெறுமதியான பிரித்தானிய பவுன்ஸ் தாள்களும் இருந்துள்ளன. இந்த தாள்கள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு, பெட்டகங்களில் வைக்கப்பட்டு இருந்தன. . அரசின் ஊழல் தடுப்பு திணைக்களத்தால் (anti-corruption agency) இப்பணம் கைப்பற்றப்பட்ட பின் இது அந்நாடு உளவு திணைக்களத்து (spy agency) உரியது என்றும், […]

வெசாக்கை ஆரம்பிக்க வருகிறார் மோதி

வரும் மே 12 ஆம் திகதி கொழும்பில் வெசாக் தினத்தை ஆரம்பித்து வைக்க இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோதி. இந்த செய்தியை நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் வியதாச ராஜபக்ச இன்று வெளியிட்டு உள்ளார். இது மோதியின் இலங்கைக்கான இரண்டாவது பயணமாகும். . இந்த விழா BMICH மண்டபத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. . 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. (UN) மே மாத பூரண சந்திர தினத்தை வெசாக் தினமாக (Day […]

பிரித்தானியாவில் திடீர் தேர்தல்

பிரித்தானியாவின் பிரதமர் Theresa May திடீர் தேர்தலுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். இந்த திடீர் தேர்தல் வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறும். . உண்மையில் அடுத்த தேர்தல் 2020 ஆம் ஆண்டிலேயே நடாத்தப்படல் வேண்டும். பிரித்தானியாவில் தேர்தல் திகதிகள் நிரந்தரமானவை (fixed) என்றாலும் சில காரணங்களுக்காக தேர்தல் முன்கூட்டியே நடாத்தப்படலாம். அரசில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொள்ளல், பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை பெறல் போன்ற சில காரணங்கள் முன்தள்ளிய தேர்தலுக்கு காரணி ஆகலாம். […]

வாக்கெடுப்பில் துருக்கி ஜனாதிபதிக்கு மேலும் பலம்

தற்போது துருக்கியில் உள்ள பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாது செய்து, பிரதமர் அமைப்பையும் இல்லது செய்து, முழுமையான அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த ஆதரவு கேட்டு தற்போதைய ஜனாதிபதி அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை இன்று ஞாயிரு நடாத்தி இருந்தார். இந்த புதிய ஜனாதிபதி ஆட்சி முறைக்கு 51.2% ஆதரவு வாக்குகள் கிடைத்து உள்ளன.அதேவேளை 48.8% வாக்குகள் இந்த புதிய முறையை மறுத்துள்ள. அதிகாரபூர்வ முடிவுகள் வெளிவர மேலும் ஒரு கிழமை செல்லலாம். . மேற்கின் […]

எல்லோரும் தோல்வி அடைவார், சீனா எச்சரிக்கை

இன்று “கொரியா குடாவில் கடுமையான சொற்களை பயன்படுத்துகிறவரோ, அல்லது சண்டைக்கு கையை உயர்த்துகிறவரோ அல்ல வெல்லுவது, பதிலாக எல்லோருமே தோல்வியை அடைவார்” என்றுள்ளார் சீனாவின் வெறியுறவு அமைச்சர் Wang Yi. அமெரிக்காவும், வடகொரியாவுக்கு ஒருவர் மீது மற்றவர் யுத்த எச்சரிக்கை விடுக்கையிலேயே சீன அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். . அமெரிக்காவில் பெருமளவில் நையாண்டி செய்யப்பட்ட ஜனாதிபதி டிரம்ப், சிரியாவின் மீது 59 ஏவுகணைகளை ஏவியபின் அமெரிக்காவில் அதிகரித்த பாராட்டை பெற்றார். உடனடியாக ஆப்கானித்தானிலும் மிகப்பெரிய குண்டு அமெரிக்காவால் […]

ஆப்கானித்தானில் மிகப்பெரிய குண்டை போட்டது அமெரிக்கா

ஆப்கானித்தானில் GBU-43/B என்ற தமது மிக பெரிய குண்டு ஒன்றை இன்று போட்டுள்ளதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்ரகன் (Pentagon) கூறியுள்ளது. இந்த குண்டு ஒன்று சுமார் 11 தொன் வெடிமருந்தை கொண்டிருக்கும். . இந்த குண்டு குகைகளில், மற்றும் சுரங்கங்களில் மறைந்து இருப்போரையும், மறைத்து வாக்கப்பட்டு உள்ளவற்றையும் அழிக்க வல்லது. . இந்த குண்டை ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானின் எல்லை அருகே, உள்ள ISIS குழுவை அழிக்க போட்டதாக கூறப்பட்டாலும், இந்நிகழ்வு இவ்வகை குண்டை வடகொரியா மீது போடுவதற்கான […]