சீனாவின் அம்பாந்தோட்டை துறைக்கு புதிய வருமானம்

சீனாவின் அம்பாந்தோட்டை துறைக்கு புதிய வருமானம்

செங்கடலில் செல்லும் கப்பல்களை கூதி ஆயுதக்குழு தாக்குவதால் சீனாவின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று முதல் புதிய வருமானம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகமும் உலகின் பெரியதோர் கொள்கலன் காவும் கப்பல் நிறுவனமான MSC யும் இந்த துறைமுகத்தை கொள்கலன் பரிமாறும்  துறைமுகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அதன்படி ஐரோப்பாவின் Rotterdam துறைமுகத்தில் பயணத்தை ஆரம்பித்து, ஆபிரிக்காவை சுற்றி வந்த MSC Ingrid என்ற கப்பல் இன்று 9ம் திகதி 500 கொள்கலன்களை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளது. இந்த 500 […]

இணக்கங்கள் இன்றி முடிந்த Yellen னின் சீன பயணம்

இணக்கங்கள் இன்றி முடிந்த Yellen னின் சீன பயணம்

அமெரிக்காவின் Treasury Secretary Janet Yellen பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள குறைபாடுகளை சீன உயர் அதிகாரிகளுடன் உரையாட 4-தின பயணம் ஒன்றை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார். அந்த பயணம் இன்று திங்கள் இணக்கங்கள் எதுவும் இன்றி முடிந்துள்ளது. ஆனாலும் இருதரப்பும் பேச்சுக்களை தொடர இணங்கியுள்ளன. அமெரிக்காவில் இது தேர்தல் ஆண்டு ஆகையால் பைடென் அரசு நல்ல பொருளாதார செய்திகளை அமெரிக்க மக்களுக்கு வழங்க விரும்புகிறது. ஆனால் சீனா அதற்கு மசியவில்லை. குறிப்பாக மின்னில் இயங்கும் வாகன […]

ரம்ப் $50 மில்லியன் சேகரிப்பு, பைடென் $26 மில்லியன் 

ரம்ப் $50 மில்லியன் சேகரிப்பு, பைடென் $26 மில்லியன் 

ரம்ப் தனது சனாதிபதி தேர்தல் செலவுகளுக்கு சனிக்கிழமை செய்த நிதி திரட்டலில் $50.5 மில்லியன் சேகரித்துள்ளார். ஒபாமா, கிளின்டன் ஆகியோரையும் அழைத்து பைடென் செய்த நிதி சேகரிப்புக்கு  கிடைத்தது $26 மில்லியன் மட்டுமே. கடந்த மாதம் ரம்ப் தரப்பு $65.6 மில்லியன் சேகரித்திருந்தது. அத்துடன் மாத முடிவில் ரம்ப் மொத்தம் $93.1 மில்லியன் சேகரித்திருந்தார். பைடென் கடந்த மாதம் $90 மில்லியன் சேகரித்து, மாத முடிவில் $192 மில்லியன் பணத்தை கொண்டிருந்தார். சனிக்கிழமை $814,600 நன்கொடை செய்தோர் […]

வர்த்தக கப்பல் இணைப்பு சுட்டியில் இலங்கை 22ம் இடம்

வர்த்தக கப்பல் இணைப்பு சுட்டியில் இலங்கை 22ம் இடம்

ஐ. நாவின் UNCTAD (United Nations Conference on Trade and Development) தயாரிக்கும் Liner Shipping Connectivity Index (LSCI) என்ற சுட்டியில் இந்த ஆண்டு இலங்கை உலக அளவில் 22ம் இடத்தை அடைந்துள்ளது.  இந்த சுட்டி ஒரு நாடு உலக வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு வழங்கும் சேவையின் வல்லமையை காட்டுகிறது. சீனா 1,187 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்திலும், தென் கொரியா 640 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 591 புள்ளிகளை பெற்று […]

தெரிந்தே 7 WCK தொண்டர்களை இஸ்ரேல் கொலை செய்தது

தெரிந்தே 7 WCK தொண்டர்களை இஸ்ரேல் கொலை செய்தது

காசா யுத்தத்தால் பாதிப்பு அடைந்தோருக்கு உணவு வழங்கும் பணியை செய்த 3 World Central Kitchen (WCK) வாகனங்கள் தவறுதலாக தாக்கப்படவில்லை. அவை மூன்றும் வெவ்வேறு இடங்களில் வைத்து precision guided ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. Jose Andres என்ற World Central Kitchen ஆரம்பிப்பாளர் மேற்படி தாக்குதலை “systematically, car by car” என்று விபரித்துள்ளார். முதலாம் வாகனம் தாக்கப்பட்ட இடத்தில் இருந்து 2.4 km தூரத்திலேயே மூன்றாம் வாகனம் தாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாகனம் இடைவழியில் தாக்கப்பட்டுள்ளது. […]

தாய்வானில் 7.6 அளவிலான நிலநடுக்கம்

தாய்வானில் 7.6 அளவிலான நிலநடுக்கம்

இன்று புதன்கிழமை காலை 8:00 மணியளவில் தாய்வானில் 7.6 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் உடைந்துள்ளன. சிறிய, 3 மீட்டர் அளவிலான சுனாமி ஜப்பான் வரை செல்கிறது. உயிரிழப்பு விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. இதன் பின் 6.5 அளவிலான நடுக்கங்களும் (aftershocks) இடம்பெற்றுள்ளன. சிறியன, பெரியனவாக 25 aftershocks இடம்பெற்றுள்ளன. இந்த நடுக்கத்தின் மையம் தாய்வானுக்கு கிழக்கே Hualien என்ற நகரத்துக்கு தெற்கே 18 km தூரத்தில், 15 km ஆழத்தில் இருந்துள்ளது. 1999ம் ஆண்டு […]

இஸ்ரேல் தாக்கி 7 World Central Kitchen தொண்டர் பலி

இஸ்ரேல் தாக்கி 7 World Central Kitchen தொண்டர் பலி

காசாவில் யுத்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்ட World Central Kitchen (WCK) என்ற தொண்டர் நிறுவன வாகனம் மீது இஸ்ரேல் வான்படை தாக்கியதால் 7 தொண்டர்கள் பலியாகி உள்ளனர். பலியானோரில் அமெரிக்க-கனேடிய இரட்டை குடியுரிமை கொண்டவர், அஸ்ரேலியர், பிரித்தானியர், போலாந்துக்காரர் ஆகியோரும் அடங்குவர். அமெரிக்கா தலைமையில் சைப்ரஸ் நாட்டில் இருந்து இழுவை கப்பல்கள் மூலம் எடுத்துவரப்பட்ட உணவுகளை மக்களுக்கு வழங்கும் பணியையே WCK தொண்டர்கள் செய்து வந்துள்ளனர். மேற்படி தொண்டர்களின் வாகன பயணம் இஸ்ரேல் […]

சிரியாவின் ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது

சிரியாவின் ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேலின் யுத்த விமானங்கள் இன்று திங்கள் தாக்கியுள்ளன. இந்த தாக்குதலுக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர்.  பலியானோரில் Mohammad Reza Zahedi என்ற Iranian Revolutionary Guards Corps படையின் அதிகாரியும் அடங்குவர். ஆனால் தூதுவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் செய்த தாக்குதலுக்கு சிரியாவில் 38 படையினர் உட்பட 53 பேர் பலியாகி இருந்தனர்.

கம்போடியாவிலிருந்து 250 இந்தியர் மீட்பு

கம்போடியாவிலிருந்து 250 இந்தியர் மீட்பு

கம்போடியாவிலிருந்து 250 இந்திய தொழில்நுட்ப ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூரகிழக்கில் தொழில்நுட்ப துறை தொழில் தருவதாக கூறி அழைத்து பின் அவர்களை அடைத்து வைத்து இணையம் மூலமான குற்றச்செயல்களுக்கு (cyber crime, online scams) பயன்படுத்தி உள்ளனர். கடத்தப்பட்ட ஒருவருக்கு பெண் ஒருவரின் படங்களை வழங்கி அவற்றை பயன்படுத்தி Facebook போன்ற கணக்குகளை ஆரம்பித்து பலரிடம் பணம் பறிக்க வைத்துள்ளனர். சிலரை வரி திணைக்கள அதிகாரிகளாக நடிக்க வைத்து பணம் பறித்துள்ளனர். 2023ம் ஆண்டு ஐ. […]

ஏப்ரல் 8 வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

ஏப்ரல் 8 வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம்

வரும் ஏப்ரல் 8ம் திகதி வட அமெரிக்காவில் பூரண சூரிய கிரகணம் இடம்பெறும். இந்த கிரகணம் சில இடங்களில் 4 நிமிடங்கள் 28 செக்கன்களுக்கு இருளை பரப்பும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. வட அமெரிக்காவின் தென் மேற்கில் ஆரம்பித்து வடகிழக்கு நோக்கி இந்த கிரகணம் நகரும். அதனால் இது Mazatlan (Mexico); 4m 14s, Dallas; 3m 47s, Little Rock; 2m 33s, Indianapolis; 3m 46s, Cleveland; 3m […]

1 3 4 5 6 7 303