மும்பாயில் மாடிகள் உடைவு, 100 பேர் இடிபாடுள்

மும்பாயில் மாடிகள் உடைவு, 100 பேர் இடிபாடுள்

மும்பாயில் இருந்து சுமார் 200 km தெற்கே உள்ள Mahad என்ற நகரில் குறைந்தது 47 மாடி வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ளன. இந்த இடிபாடுகள் உள்ளே சுமார் 100 அகப்பட்டும் உள்ளனர். குறைந்தது 28 பேர் ஏற்கனவே மீட்கப்பட்டு உள்ளனர். இதுவரை ஒருவர் பலியானது அறியப்படும் உள்ளது. ஐந்து மாடி அடுக்குகளை கொண்ட இந்த வீட்டு தொகுதியிலேயே மேற்படி 47 வீடுகளும் இருந்துள்ளன. உள்ளூர் நேரப்படி இன்று திங்கள் மாலை 6:50 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. […]

அமெரிக்க அறிக்கை: சீன இராணுவ பலம் நிகராகிறது

அமெரிக்க காங்கிரசின் (US Congress) பணிப்பிற்கு அமைய இராணுவ ஆய்வாளர் குழு ஒன்று தயாரித்த ஆய்வு அறிக்கையின்படி சீனாவின் இராணுவம் அமெரிக்காவின் இராணுவத்தின் பலத்துக்கு ஏறக்குறைய நிகரான நிலையை அடைந்துள்ளது. இந்த மாதம் சமர்பிக்கப்பட்ட மேற்படி அறிக்கை Emerging Military Technologies: Background and Issues for Congress என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி தற்போது சீனாவே அமெரிக்க படைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து, ரஷ்யா அல்ல. தென்சீன கடல், தாய்வான் போன்ற சீனாவை அண்டிய பகுதில் […]

Ukraine வழியில் அழியும் Belarus?

Ukraine வழியில் அழியும் Belarus?

கடந்த சில ஆண்டுகளாக மேற்கு நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குள் அகப்பட்டு அழிந்த நாடு யுக்ரைன் (Ukraine). இறுதியில் கிரைமியாவை (Crimea) ரஷ்யா கைப்பற்றி, கிழக்கு  யுக்ரைனை ரஷ்ய மொழி பேசும்  யுக்ரைன்நாட்டவர் கைப்பற்ற  யுக்ரைன் சிதைந்தது. தற்போது அந்நிலை அருகில் உள்ள பெலருசுக்கு (Belarus) ஏற்படலாம் என்று தெரிகிறது. USSR அழிந்த பின், 1994 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சனாதிபதி Alexander Lukashenko பெலருசில் ஆட்சியில் உள்ளார். சர்வாதிகாரி போல் செயல்படும் இவரின் ஆட்சியில் […]

Apple பங்குச்சந்தை பெறுமதி $2 டிரில்லியன்

Apple பங்குச்சந்தை பெறுமதி $2 டிரில்லியன்

iPhone, iPad போன்ற இலத்திரனியல் பொருட்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Apple நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (stock market capital) இன்று புதன் $2 டிரில்லியனை ($2,000,000,000,000) அடைந்துள்ளது. அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று இந்த பெறுமதியை அடைவது இதுவே முதல் தடவை. இன்று Apple நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை $467.77 ஆக உயர்ந்து இருந்தது. தற்போது சுமார் 4.355 பில்லியன் Apple பங்குகள் சந்தையில்  உள்ளன. 2018 ஆம் ஆண்டில் Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 […]

பா.ஜ. ஆட்சிக்கு facebook மறைமுக ஆதரவு

பா.ஜ. ஆட்சிக்கு facebook மறைமுக ஆதரவு

மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சிக்கு (BJP) சட்டத்துக்கு முரணான முறையில் facebook ஆதவு செய்கிறது என்று அமெரிக்காவின் Wall Street Journal (WSJ) ஆய்வு கட்டுரை ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு கட்டுரைக்கு WSJ தற்போதைய, மற்றும் முன்னாள் facebook ஊழியர்களுடன் WSJ உரையாடி தகவல்களை பெற்று உள்ளது. facebook இணையத்தில் பொய்யான செய்திகள் பதிவுசெய்தல், வன்முறையை தூண்டும் செய்திகளை பதிவு செய்தல் போன்றன தடை செய்யப்பட்டுள்ளன. அதனால் அவ்வாறான பதிவுகள் facebook ஊழியரால் நீக்கப்படும். […]

மாலியில் இன்று இராணுவ கிளர்ச்சி

மாலியில் இன்று இராணுவ கிளர்ச்சி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் (Mali) இன்று கீழ்மட்ட இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கீழ்மட்ட இராணுவத்தினர் அந்நாட்டின் சனாதிபதி Ibrahim Boubakar Keita என்பவரையும், பிரதமர் Boubou Cisse என்பவரையும் இன்று செவ்வாய் காலை கைது செய்தும் உள்ளனர். கூடவே இராணுவ உயர் அதிகாரிகளும் தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். தலைநகர் Bamako வில் சில அரச கட்டிடங்கள் தீக்கு இரையாகி உள்ளன. Colonel Sadio Camara என்பவரே இந்த கிளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அண்மைக்காலங்களில் Mahmoud […]

முன்னாள் ஸ்பெயின் அரசர் UAE யில் தஞ்சம்

முன்னாள் ஸ்பெயின் அரசர் UAE யில் தஞ்சம்

முன்னாள் ஸ்பெயின் (Spain) அரசர் Juan Carlos I ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பும் நோக்கில் UAE யில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை ஸ்பெயின் அரச குடும்பம் இன்று திங்கள் கூறியுள்ளது. இவர் கடந்த 3 ஆம் திகதி UAE சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அரசர் மீது ஸ்பெயின், சுவிற்சர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் விசாரணை செய்கின்றன. முன்னாள் அரசர் Corinna zu Sayn-Wittgenstein-Sayn என்ற டென்மார்க் பெண் ஒருவருக்கு பெரும் தொகை பணம் […]