மோட்டு சிங்களம், not anymore

மோட்டு சிங்களம், not anymore

தமிழ், குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் தன்னை புத்திசாலி என்று நிறுவ சிங்களத்தை ‘மோட்டு சிங்களம்’ என்று கூறும். ஆனால் தற்கால நிகழ்வுகள் தமிழர் தான் மூடர் என எண்ண வைக்கிறது. வல்வெட்டித்துறையிலிருந்து ஹாட்லி கல்லூரிக்கு வந்த மாணவன் ஒருவன் தனது 6ம் ஆண்டில் ஒரு வகுப்பறை நாடகம் நிகழ்த்தினான். அந்த நாடகத்தின் பிரதான நோக்கம் சிங்களவன் ஒரு மூடன் என நிறுவதே. நாடகத்தின் பெயர் “சொன்னதை செய்யும் பாண்டா”. யாழ்ப்பாணத்தில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிங்கள ‘வேலைக்கார […]

சிக்காகோவில் 7 பேரை சுட்டவனின் கவலைக்குரிய குடும்பம்

சிக்காகோவில் 7 பேரை சுட்டவனின் கவலைக்குரிய குடும்பம்

ஜூலை 4ம் திகதி, அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று, சிக்காகோ (Chicago) சுதந்திர தின ஊர்வலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 7 பேர் பலியாகியும், 10 பேர் வரை காயமடைந்தும் இருந்தனர். அந்த துப்பாக்கி சூட்டை செய்த பாபி (Bobby என்று அழைக்கப்படும் Robert Crimo III) என்பவனின் குடும்ப இடர்கள் தற்போது வெளிவந்துள்ளன. பாபியின் தாயும், தந்தையும் நீண்ட காலமாக முரண்பாட்டில் இருந்துள்ளனர். தந்தை பொருளாதார நெருக்கடியிலும் இருந்துள்ளார். பெற்றோரின் முரண்பாடுகள் காரணமாக பல தடவைகள் போலீசார் […]

முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபே மீது சூடு

முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபே மீது சூடு

முன்னாள் ஜப்பானிய பிரதமரான Shinzo Abe மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். துப்பாக்கி சூட்டின் பின் அபே நிலத்தில் வீழ்ந்து உள்ளார். தற்போது வைத்தியசாலையில் உள்ள அவரின் நிலை வெளியிடப்படவில்லை. சந்தேக நபர் காவலில் உள்ளார். Nara என்ற நகரில் அபே பேச்சு ஒன்றை நிகழ்த்தும் வேளையிலேயே சுடப்பட்டார். உள்ளூர் நேரடி வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சூட்டுக்கு ஆளான பின்னரும் அபே நினைவுடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. அபே இரண்டு […]

ஆர்ஜென்டீனாவின் BRICS இணைவுக்கு சீனா ஆதரவு

ஆர்ஜென்டீனாவின் BRICS இணைவுக்கு சீனா ஆதரவு

Brazil, Russia, India, China, South Africa ஆகிய 5 நாடுகள் இணைந்து உருவாக்கிய BRICS என்ற பொருளாதார அமைப்பில் தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனா (Argentina) இணைய சீனா இன்று வியாழன் ஆதரவு வழங்கி உள்ளது. G20 அமர்வுக்கு இந்தோனேசியா சென்றிருந்த சீன வெளியுறவு அமைச்சருடன் ஆர்ஜென்டீன வெளியுறவு சந்தித்த பின்னரே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு நாடுகளின் பொருளாதார ஆளுமைக்கு போட்டியா வளர்வதே BRICS பொருளாதார கட்டமைப்பு. 2001ம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்ட வேளையில் […]

பதவி விலகுவாரா பிரித்தானிய பிரதமர்?

பதவி விலகுவாரா பிரித்தானிய பிரதமர்?

சுமார் 38 பிரித்தானிய அமைச்சர்கள் (secretaries) அல்லது உயர் அதிகாரிகள் பிரதமரை கைவிட்டு பதவி விலகி உள்ள நிலையில் பிரதமர் Boris Johnson பதவி விலக அழுத்தங்கள் வலுவாகி வருகின்றன. ஆனாலும் தான் பதவி விலகேன் என்கிறார் Johnson. ஒரே நாளில் பிரதமர் குறைந்தது 14 அமைச்சர்களை இழந்து உள்ளார். இன்று ஆளும் கட்சியின் இரு குழுக்கள் பிரதமரை சந்தித்து உள்ளன. அதில் ஒன்று பிரதமரை பதவி விலக்கும்படி அழுத்தி உள்ளது. ஆனால் மற்றைய குழு பிரதமரை […]

பிரித்தானிய அமைச்சர்கள், Solicitor General பதவி விலகினர்

பிரித்தானிய அமைச்சர்கள், Solicitor General பதவி விலகினர்

பிரித்தானிய Boris Johnson ஆட்சி தற்பொழுது பெரும் குழப்பத்தில் உள்ளது. பலர் Boris Johnson ஆட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இறுதியாக Alex Chalk என்ற அந்நாட்டு solicitor general தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே Rishi Sunak என்ற நிதி அமைச்சரும், Sajid Javid என்ற சுகாதார அமைச்சரும் தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம் இன்று செவ்வாய் வழங்கி உள்ளனர். இரண்டு பிரதான அமைச்சர்கள் சில நிமிடங்களில் பதவி விலகுவது பிரதமருக்கு […]

கனடிய சீனர் மீது சீனாவில் ஊழல் வழக்கு

கனடிய சீனர் மீது சீனாவில் ஊழல் வழக்கு

சுமார் $6 பில்லியன் சொத்துக்களை கொண்ட Xiao Jianhua என்ற கனடிய சீனர் மீது சீனா ஊழல் வழக்குகளை இன்று திங்கள் தாக்கல் செய்துள்ளது. ஹாங் காங் நகரில் மறைந்து இருந்த நேரத்தில் அடையாளம் காணப்படாதோரால் 2017ம் ஆண்டு கடத்தப்பட்டு இருந்த இவர் தற்போது சீன போலீசாரின் கையில் உள்ளார். இவர் கடத்தப்பட்டு சுமார் 5 ஆண்டுகள் சென்றாலும் தற்போதே இவர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவர் ஒரு கனடியர் என்றபடியால் சீனாவில் உள்ள […]

Windows, Apple OS களை தவிர்க்க சீனா வளர்க்கும் Kylin Linux

Windows, Apple OS களை தவிர்க்க சீனா வளர்க்கும் Kylin Linux

உலகம் எங்கும் பொதுவாக இரண்டு வகை OS (Operating System) கொண்ட கணனிகள் உண்டு. அதில் சுமார் 85% கணனிகள் பயன்படுத்துவது அமெரிக்க Microsoft நிறுவனத்தின் Windows என்ற OS. அடுத்து, சுமார் 15% கணனிகள் பயன்படுத்துவது அமெரிக்க Apple நிறுவனத்தின் iOS. ஆனால் வேறு சில OS களும் உண்டு. அதில் Linux வகை OS தரமான ஒன்று. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள Windows மற்றும் Apple கணனிகளில் இருந்து தன்னை விடுவிக்க சீனா Kylin […]

சீனாவுக்கு 300 ஐரோப்பிய விமானங்கள், அமெரிக்கா புறக்கணிப்பு

சீனாவுக்கு 300 ஐரோப்பிய விமானங்கள், அமெரிக்கா புறக்கணிப்பு

சீனா Boeing என்ற அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனத்தை முற்றாக புறக்கணித்து, Airbus என்ற ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சுமார் 300 பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்கிறது. அமெரிக்கா புறக்கணிக்கப்பட்டமைக்கு அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் தற்போது நிலவும் அரசியல் முறுகல் நிலையே காரணம் என்று கவலை தெரிவித்து உள்ளது Boeing. Air China விமான சேவையும், China Southern Airlines விமான சேவையும் தலா 96 விமானங்களாக மொத்தம் 192 Airbus A320 Neo […]

இலங்கை கடனுக்கு IMF இதுவரை தீர்மானம் இல்லை

இலங்கை கடனுக்கு IMF இதுவரை தீர்மானம் இல்லை

இலங்கை வந்திருந்த International Monetary Fund (IMF) அதிகாரிகள் 10 நாட்கள் பேச்சுக்களை கொண்டிருந்தாலும் இலங்கைக்கு கடன் வழங்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. பேச்சுக்கள் நலமாக (constructive) இடம்பெற்றன என்று வியாழன் கூறி இருந்தாலும், மேலும் உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது IMF. மேலதிக பேச்சுக்கள் இணையம் மூலம் தொடரும் என்றும் IMF கூறி உள்ளது. இக்காலத்தில் staff-level இணக்கம் கொண்டு இணக்கத்தை நடைமுறை செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். அதன் பின்னரே IMF அமைப்பின் Executive Board கடனை வழங்க […]

1 64 65 66 67 68 311