West Bank யூத வன்முறையாளர் மீது ஐரோப்பா தடை

West Bank யூத வன்முறையாளர் மீது ஐரோப்பா தடை

பாலத்தீன West Bank பகுதியில் ஆக்கிரமித்து உள்ள யூத வன்முறையாளர் மீது தடைகளை நடைமுறை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் இன்று திங்கள் இணங்கி உள்ளது. மொத்தம் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்ட, ரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவு கொண்ட ஹங்கேரியின் (Hungary) பிரதமர் Viktor Orban மேற்படி தடை முயற்சியை இதுவரை தடுத்து வந்திருந்தார். அண்மையில் Orban ஆட்சியை இழக்க, ஹங்கேரியின் புதிய பிரதமர் ஏனைய 26 நாடுகளுடன் இணங்கி, வன்முறை செய்யும் யூதர்கள் […]

ஈரான் பேச்சு இழுபாட்டால் குமுறுகிறார் ரம்ப் 

ஈரான் பேச்சு இழுபாட்டால் குமுறுகிறார் ரம்ப் 

தான் விரும்பும் தீர்வுக்கு ஈரான் உடன்படாததால் முறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். குண்டுகளை வீசி தனது விருப்பங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் ரம்ப் தன் விருப்பங்களை பேச்சுக்கள் மூலம் அடைய முனைகிறார். குறிப்பாக அமெரிக்காவின் இறுதி திட்டத்தை ஈரான் ஏற்க மறுத்துள்ளது. அதனால் ரம்ப் மீண்டும் ஈரான் மீது குண்டுகளை வீச ஆரம்பிக்கலாம். ஆனால் குறைந்தது சுமார் 100,000 முதல் 200,000 வரையான அமெரிக்க படைகளை களத்தில் இறக்காது ரம்ப் எதையும் சாதிக்க முடியாது. அவ்வாறு இறக்கினால் அது வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் வரிசையில் அமையும். […]

விமானம் தாங்கி ஈரானுக்கு எதிராக அல்ல என்கிறார் மக்கிறான்

விமானம் தாங்கி ஈரானுக்கு எதிராக அல்ல என்கிறார் மக்கிறான்

சில தினங்களுக்கு முன் பிரான்ஸ் தனது ஒரே விமானம் தாங்கி கப்பலை சூயஸ் கால்வாய் மூலம் செங்கடலுக்கு அனுப்பி இருந்தது. இதன் நோக்கம் கப்பலை ஹோர்முஸ் பாதையை திறக்க உதவ என்றே கருதப்பட்டது. அனால் இன்று பிரெஞ்சு சனாதிபதி ஈரானுக்கு முரணாக விமானம் தாங்கி பயன்படுத்தப்படாது என்று கூறியுள்ளார். அதேவேளை பிரித்தானியாவும் தனது கப்பலை மத்திய கிழக்கு நோக்கி அனுப்பி உள்ளது. பிரித்தானியாவும் நோக்கத்தை அறிவிக்கவில்லை.

FIFA 2026 உதைபந்தாட்ட ஆசன கட்டணம் $32,970

FIFA 2026 உதைபந்தாட்ட ஆசன கட்டணம் $32,970

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள FIFA உதைபந்தாட்ட போட்டி ஒன்றிற்கான “category 1” பார்வையாளர் ஆசனத்தின் சட்டப்படியான கட்டணம் $32,970 என்று FIFA அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 19ம் திகதி அமெரிக்காவின் New Jersey மாநிலத்தின் East Rutherford நகரில் உள்ள MetLife மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டிக்கே இந்த கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்துக்கு நியூ யார்க் நகரில் இருந்து பயணிக்க பஸ் கட்டணம் $150 என்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் திகதி Texas மாநிலத்து AT&T மைதானத்தில் இடம்பெறவுள்ள […]

Operation Epic Fury யுத்தம் முடிந்தது, யுத்த நிறுத்தம் முடியவில்லை 

Operation Epic Fury யுத்தம் முடிந்தது, யுத்த நிறுத்தம் முடியவில்லை 

அமெரிக்க வெளியுறவு செயலாளர் (Secretary of State) Marco Rubio அமெரிக்கா ஈரான் மீது பெப்ரவரி 28ம் திகதி தொடுத்த Operation Epic Fury என்ற பெயர் கொண்ட யுத்தம் நிறைவு பெற்றுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார். “The operation is over” என்றுள்ளார் Marco Rubio. ஈரானின் அணு வேலைகளை அழிப்பது, அவர்களின் கைகளில் உள்ள யுரேனியத்தை அமெரிக்கா எடுப்பது, ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு செய்வது, பொம்மை அரசை அமைப்பது போன்ற பல கனவுகளுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த […]

அமெரிக்கா, ஈரான் மறுதரப்பு மீது தாக்குதல், யுத்த நிறுத்தம் முறிந்தது?

அமெரிக்கா, ஈரான் மறுதரப்பு மீது தாக்குதல், யுத்த நிறுத்தம் முறிந்தது?

இன்று திங்கள் அமெரிக்க படைகளும், ஈரான் படைகளும் மறுதரப்பு மீது கடுமையான தாக்குதல்களை செய்துள்ளன. ஈரான் UAE துறைமுகம் மீதும் தாக்கியதாக UAE கூறியுள்ளது. அமெரிக்க யுத்த கப்பல்கள் யுத்த நிறுத்த நிபந்தனையை மீறி ஹோர்முஸ் பகுதிக்குள் நுழைய முற்பட்ட வேளையிலேயே அவற்றின் மீது ஈரான் தாக்குதலை செய்துள்ளது. பதிலுக்கு அமெரிக்கா ஈரானின் சில சிறிய இராணுவ படகுகளை தாக்கியுள்ளது. யுத்த நிறுத்தம் முறிந்ததா அல்லது தொடர்கிறதா என்பதை தன்னால் கூற முடியாது என்று அங்கு அமெரிக்க படைகளை வழிநடத்தும் அட்மிரல் Bradley […]

இணக்கமின்றி ஹோர்முஸ் உள் நுழைய ரம்ப் முயற்சி, ஈரான் தடுப்பு

இணக்கமின்றி ஹோர்முஸ் உள் நுழைய ரம்ப் முயற்சி, ஈரான் தடுப்பு

தானும், இஸ்ரேலும் விரும்பும் தீர்வுக்கு ஈரான் இணைக்காத நிலையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் “அகப்பட்ட கப்பல்களை விடுவிக்கிறேன்” என்று சாட்டு கூறி ஹோர்முஸ் உள் நுழைய முற்பட்டாலும், அச்செயல் யுத்த நிறுத்த இணக்கத்துக்கு முரண் என்று கூறி தாக்க தயாராகிறது ஈரான். ஈரான் கப்பல்கள் மீது தொடர்ந்தும் தனது தடையை நடைமுறை செய்து கொண்டே அமெரிக்கா ஏனைய கப்பல்களை விடுவிக்க முனைகிறதாம். இந்த பணிக்கு ஏவுகணைகள், 100 க்கும் மேற்பட்ட யுத்த விமானங்களையும், 15,000 படையினரையும் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கூறி இருந்தனர். […]

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் தூக்கு கயிறு பிறந்தநாள் கேக்

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் தூக்கு கயிறு பிறந்தநாள் கேக்

Ben-Gvir என்ற பாலஸ்தீனர்கள் மீது கடும் காழ்ப்பு கொண்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருக்கு அவரின் 50 வது பிறந்த தினத்தில் அவரின் மனைவி வழங்கிய பிறந்தநாள் கேக்கில் தூக்கு கயிறு பதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில் எழுதப்பட்ட கீபுறு வசனம் “sometimes dreams do come true” என்றுள்ளது. அதாவது சிலவேளைகளில் கனவுகள் நடைமுறை ஆகின்றன என்று கூறப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள West Bank பகுதி பாலஸ்தீனர்களுக்கு மட்டும் நடைமுறை செய்யப்பட்ட மரண தண்டனை சட்டத்தை கொண்டாடவே இந்த கேக்கில் உள்ள தூக்கு கயிறு.

ஜெருசலேமில் கிறிஸ்தவ Nun ஐ தள்ளி விழுத்தி தாக்கிய யூதன்

ஜெருசலேமில் கிறிஸ்தவ Nun ஐ தள்ளி விழுத்தி தாக்கிய யூதன்

பலஸ்தீனர்களை விருப்பப்படி தாக்கும் கடும்போக்கு யூதர்களின் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது.  இம்முறை தன் பாட்டுக்கு வீதி வழியே நடந்து சென்ற French nun ஒருத்தியை 36 வயது யூதன் ஒருவன் பின்புறத்தில் இருந்து தள்ளி விழுத்தி, பின் காலால் உதைத்து தங்கியுள்ளான். இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் FBI Director மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு, சிப்பிகள் காரணம் 

முன்னாள் FBI Director மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு, சிப்பிகள் காரணம் 

முன்னாள் அமெரிக்க FBI Director James Comey மீது ரம்ப் அரசு சனாதிபதி மீது கொலை மிரட்டல் செய்தார் என்று வழக்கு ஒன்றை செவ்வாய் தாக்கல் செய்துள்ளது. தனக்கு பிடிக்காதவர்களை தன் பதவியை பயன்படுத்தி பழிவாங்குவதில் சுகம் கொள்பவரான ரம்ப் Comey மீது தொடரும் இரண்டாவது வழக்கு இது. முதல் வழக்கு கடந்த ஆண்டு நீதிபதியால் வீசப்பட்டது. இம்முறை Comey செய்த தவறு கடலோரம் “86 47” இருந்த சிப்பிகளை படம்பிடித்து தனது இணைய தளங்களில் பதிந்ததே. இங்கே 47 என்ற இலக்கம் 47வது சனாதிபதியை, அதாவது […]