சந்திரனில் கருகிய பருத்தி தளிர்

அண்மையில் சீனாவின் Chang’e என்ற விண்கலம் சந்திரனின் மறுபக்கத்தில், பூமிக்கு தெரியா பக்கத்தில், தரையிறங்கி இருந்தது. இக்கலத்தில் ஆய்வு நோக்கில் சில பொருட்களும் எடுத்து செல்லப்பட்டது. அப்பொருட்களில் தளிர்க்கவிருந்த பருத்தி தாவரமும் ஒன்று. அந்த விண்கலத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை ஒன்றில் இருந்த இந்த பருத்தி எதிர்பார்த்தபடியே சந்திரனில் தரைதட்டிய பின் தளிர் விட்டு இருந்தது. ஆனால் அந்த தளிர் மின் துண்டிப்பு காரணமாக தற்போது கருகிவிட்டது. . இந்த பருத்தி தளிர் இரண்டு நாட்களுக்கு நலமாக […]

சந்திரனின் மறுபக்கம் செல்கிறது சீன கலம்

இன்று சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு தரை இறங்கும் கலம் (lander) ஒன்றையும், தரையில் நகரும் கலம் (rover) ஒன்றையும் ஏவி உள்ளது. இந்த இரண்டையும் கொண்ட Chang’e 4 என்ற பெயர் கொண்ட பெரும்கலம் இன்று சீன நேரப்படி அதிகாலை 2:23 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. . சந்திரன் தன்னை தானே சுற்ற சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதாலும், சந்திரன் பூமியை சுற்றவும் சுமார் 28 நாட்கள் தேவைப்படுவதால், சந்திரனின் ஒருபக்கம் மட்டுமே பூமிக்கு எப்போதும் தெரியும். மறுபக்கம் […]

ரஷ்ய விண்கல ஏவுகணை வீழ்ந்தது, பயணித்தோர் தப்பினர்

சர்வதேச வின் நிலையத்துக்கு (IIS, International Space Station) இரண்டு விண்வெளி வீரர்களை ஏற்றி சென்ற ரஷ்யாவின் சோயூஸ் (Soyuz) ஏவுகணை இயந்திர கோளாறு காரணமாக பயணத்தை தொடராது வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த இரண்டு வீரர்களும் தப்பி உள்ளனர். . Alesey Ovchiin என்ற ரஷ்ய விண்வெளி வீரரும், Nick Haque என்ற அமெரிக்க வீரருமே இவ்வாறு விபத்தில் இருந்து தப்பியவர்கள். . Soyuz கலம் ஏவப்படத்தில் இருந்து முதல் 90 செக்கன்கள் வரை குளறுபடிகள் எதுவும் […]

சூரியனை நோக்கி நாசாவின் விண்கலம்

நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் நாசா (NASA) சூரியனை நோக்கி விண்கலம் (probe) ஒன்றை ஏவி உள்ளது. Parker Solar Probe என்ற இந்த விண்கலம் புளோரிடா (Florida) மாநிலத்தின் Cape Canaveral தளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது. . இந்த விண்கலமே சூரியனுக்கு மிக அருகாக செல்லவுள்ள முதல் விண்கலமாகும். சூரியனுக்கு அருகில் வெப்பநிலை சுமார் 555,000 C என்று கூறப்படுகிறது. அதனால் இந்த விண்கலம் சூரியனில் இருந்து சுமார் 6 மில்லியன் km தொலைவிலேயே எரிந்து பயனற்று […]

சீனாவில் LingWu Dragon எலும்புகள் அகழ்வு

சீனாவின் வடமேற்கு பகுதியான LingWu என்ற இடத்தில் புதிய வகை dinosaur எலும்புகள் அகழ்வு செய்யப்பட்டுள்ளன. LingWuLong Shenqi (LingWu Amazing Dragon) என்று பெயரிடப்பட்ட இந்த தாவரம் உண்ணும் விலங்குகள் சுமார் 175 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் சென்று கூறப்படுகிறது. . சீனாவில் அகழ்வு செய்யப்பட்ட இந்த விலங்குகளின் தலையில் இருந்து வால் நுனி வரையான நீளம் சுமார் 57 அடி என்று அறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பின், இதுவரை கணித்திருந்த காலத்துக்கும் 15 மில்லியன் […]

சீனாவின் ஆளுமையில் 5G , CIA எச்சரிக்கை

தற்போது உலகின் எந்த பகுதியிலும் இருக்கக்கூடிய அதிவேக cell phone இணைப்பு 4G தொழில்நுட்பத்தை கொண்டது. ஆனால் அடுத்து வரவுள்ள 5G cell phone தொழில்நுட்பம் 4G வேகத்துடன் ஒப்பிடுகையில் பலமடங்கு வேகமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் HD தரம் கொண்ட திரைப்படத்தை சில நிமிடங்களில் download செய்ய வழிசெய்யும். அத்துடன் சாரதியில்லாத வாகனங்கள் போன்றவற்றை இயக்கவும் இது நன்கு பயன்படும். . இதுவரைகாலமும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளே தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தின. தற்போதுள்ள 4G […]

சீன விண்கலத்தில் எல்லா நாடுகளுக்கும் அனுமதி

சீனா தான் ஏவப்போகும் விண்வெளி ஆய்வுகூட பணிகளில் பங்கெடுக்க அனைத்து ஐ.நா. நாடுகளுக்கும் அனுமதி வழங்கவுள்ளது. இந்த செய்தியை சீனாவுக்கான ஐ.நா. தூதுவர் Shi Zhongjun திங்கள்கிழமை தெரிவித்து உள்ளார். தற்போது அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் ISS (International Space Station) அதன் அங்கத்துவ நாடுகளுக்கு மட்டுமே இணைந்து செயல்பட அனுமதி வழங்குகிறது. . Tianhe (ரிஅன்-ஹே அல்லது Harmony of the Heavens) என்று நாமம் கொண்ட China Space Station (CSS) 2019 ஆண்டில் […]

GSAT-6A செய்மதி தொடர்பை இழந்தது இந்தியா

இந்தியா ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி GSAT-6A என்ற நவீன செய்மதியை ஏவி இருந்தது. ஆனால் அந்த செய்மதியுடனான தொடர்புகளை மறுநாள் 30 ஆம் திகதி முதல் முற்றாக இழந்துள்ளது இந்திய ISRO. (Indian Space Research Organization). இந்த செய்தியை ISRO தற்போது உறுதி செய்துள்ளது. . இந்த செய்மதியை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ISRO தன்னால் முடிந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதுவற்றை அம்முயற்சிகள் எந்த பலனையும் வழங்கவில்லை. . […]

அமெரிக்காவில் UFO?

இந்த வருடம் பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவின் Arizona மாநில வானத்தில் பறந்துகொண்டிருந்த இரண்டு விமானங்களின் விமானிகள் அப்பகுதியில் பறந்த UFO ஒன்றை கண்டார்களா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. . பெப்ருவரி மாதம் 24 ஆம் திகதி Phoenix Air விமான சேவைக்கு சொந்தமான நடுத்தர அளவிலான Learjet விமானம் ஒன்று அரிசோனா (Arizona) மாநில வானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் பறந்து […]

சீனாவின் விண்ஆய்வுகூடம் சிலநாளில் விழும்

Tiangong-1 என்ற சீனாவின் விண் ஆய்வுகூடம் இந்த மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வாணில் இருந்து விழும் என்று கூறப்படுகிறது. இந்த விண் ஆய்வுக்கூடம் வளிமண்டலத்தில் நுழைந்த பின்பே விழும் நேரத்தையும், இடத்தையும் குறிப்பாக கூற முடியும் என்றும் கூறப்படுகிறது. . ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதே விண் ஆய்வு நிலைய அமைப்பில் (International Space Station) சீனா இணைவதை அமெரிக்கா தடுத்தபோது, […]