சாப்பாட்டு கட்டணம் $37.93, tips $16,000

சாப்பாட்டு கட்டணம் $37.93, tips $16,000

அமெரிக்காவின் New Hampshire என்ற மாநிலத்தில் உள்ள Londonderry என்ற நகரத்து உணவகம் ஒன்று வழங்கிய $37.93 பெறுமதியான உணவுக்கு மேலும் $16,000 பணத்தை tips ஆக பெற்றுள்ளது. Stumble Inn Bar & Grill என்ற உணவகத்தில் ஜூன் மாதம் 12ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்று இருந்தாலும், உணவக உரிமையாளர் பயன்படுத்தப்பட்ட கடன் அட்டை சந்தேகத்துக்கு இடமானதாக இருக்குமோ என்று குழம்பியதால் விசயத்தை உடனே பகிரங்கம் செய்யவில்லை. குறித்த தொகை ஜூன் 21ம் திகதி […]

இஸ்தான்புல் ஊடே இன்னோர் கால்வாய்

இஸ்தான்புல் ஊடே இன்னோர் கால்வாய்

துருக்கிக்கு வடக்கே உள்ள கருங்கடலையும், தெற்கே உள்ள Mediterranean கடலையும் தற்போது இணைப்பது இயற்கை உருவாக்கிய Bosporus கால்வாய் (Strait of Istanbul). ஆனால் அந்த இரு கடல்களையும் இணைக்க துருக்கி இன்னோர் கால்வாயையும் கட்டவுள்ளது. இந்த புதிய கால்வாய்க்கான அடிக்கல்லை அந்நாட்டு சனாதிபதி Recep Tayyip Erdogan இன்று சனிக்கிழமை பதித்துள்ளார். சுமார் 45 km நீள புதிய கால்வாய் கட்டுமானத்துக்கு சுமார் $15 பில்லியன் செல்வாகும் என்றும், சுமார் 6 ஆண்டுகள் தேவை என்றும் […]

சீனாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன்னைய Dragon Man

சீனாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன்னைய Dragon Man

சீனாவில் சுமார் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரை ஒத்த ஒருவரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவருக்கு  Dragon Man அல்லது Homo longi என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவ்வகையினர் கிழக்கு ஆசியாவில் 160,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த செய்தி இதுவரை விஞ்ஞானம் கொண்டிருந்த நமது ஆதி மூதையர் என்று கருதப்பட்ட Neanderthals மற்றும் Homo erectus மீதான கருத்துக்களை மீளாய்வு செய்ய வைத்துள்ளது. இந்த எலும்புகள் 1933ம் ஆண்டே Harbin […]

கனடாவில் மேலும் 751 பூர்வீக சிறுவர்களின் புதைகுழிகள்

கனடாவில் மேலும் 751 பூர்வீக சிறுவர்களின் புதைகுழிகள்

கனடாவின் சஸ்காச்சுவான் (Saskatchewan) மாநிலத்தில் மேலும் 751 பூர்வீக குடி சிறுவர்களின் அடையாளம் இன்றிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. சில கிழமைகளுக்கு முன்னரே கனடாவின் British Columbia மாநிலத்தில் 215 பூர்வீக குடி சிறுவர்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. Saskatchewan புதைகுழிகள் 1899ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை இயங்கிய The Marieval Indian Residential School என்ற பாடசாலை இருந்த பகுதியிலேயே காணப்பட்டு உள்ளன. ஆதிக்குடி மக்களின் சிறுவர்களை பலவந்தமாக பெற்றாரிடம் இருந்து பிரித்து […]

Miami மாடி உடைந்து வீழ்ந்தது, 99 பேர் தொலைவு

Miami மாடி உடைந்து வீழ்ந்தது, 99 பேர் தொலைவு

அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Miami நகரில் உள்ள மாடிவீடுகளை கொண்ட 12 மாடி கட்டிடத்தின் அரைப்பகுதி இன்று வியாழன் அதிகாலை 1:30 மணியளவில் உடைந்து வீழ்ந்துள்ளது. இதுவரை ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 99 பேர் எங்கே என்று அறியப்படவில்லை. அதேவேளை 102 பேர் தப்பி அல்லது காப்பாற்றப்பட்டு உள்ளனர். 1981ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாடியில் உள்ள 135 வீடுகளில், 55 வீடுகள் உடைந்து வீழ்ந்து உள்ளன. இந்த மாடி 8777 Collins […]

Antivirus குரு McAfee ஸ்பெயின் சிறையில் மரணம்

Antivirus குரு McAfee ஸ்பெயின் சிறையில் மரணம்

McAfee என்ற antivirus software நிறுவனத்தை ஆரம்பித்த John McAfee, வயது 75, இன்று புதன்கிழமை ஸ்பெயின் சிறையில் பிணமாக காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னரே ஸ்பெயின் நீதிமன்றம் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தலாம் என்று தீர்ப்பு கூறியிருந்தது. 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட McAfee என்ற antivirus software முதல் தரமான antivirus software ஆக விளங்கியது. அதை ஆரம்பித்த John McAfee antivirus software மூலம் பெரும் செல்வந்தத்தை பெற்று […]

அமெரிக்கா, சீனா இடையே தூதுவர் இல்லை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே தற்போது தூதுவர்கள் இன்றிய நிலை உருவாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் முறுகல் நிலையின் ஒரு அங்கமாகவே கருதப்படுகிறது. இருதரப்பிலும் தூதரகங்கள் இருந்தாலும் தற்போது தூதுவர்கள் இல்லை. கடந்த ஆண்டு, ரம்ப் ஆட்சிக்காலத்தில், Terry Branstad என்ற சீனாவுக்கான அமெரிக்க தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டு இருந்தார். அனால் சனாதிபதி ரம்போ அல்லது பின் வந்த சனாதிபதி பைடெனோ சீனாவுக்கான புதிய தூதுவரை இதுவரை நியமிக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவுக்கான சீனாவின் தூதுவர் Cui […]

பணிப்பெண் கொலை, சிங்கப்பூர் வீட்டுக்காரிக்கு 30 ஆண்டுகள்

பணிப்பெண் கொலை, சிங்கப்பூர் வீட்டுக்காரிக்கு 30 ஆண்டுகள்

தனது வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த மியன்மார் நாட்டு பெண்ணை காயத்திரி முருகையன் (Gaiyathiri Murugaran) என்ற வீட்டுக்காரிக்கு அடித்து, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக இன்று செவ்வாய் 30 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பலியான Piang Ngaih Don என்ற 24 வயதுடைய பணிப்பெண் மேற்படி குடும்பத்தில் 1 ஆண்டு அளவிலேயே பணி செய்து வந்துள்ளார். இப்பெண் காலால் மிதித்து, கழுத்தை நெரித்து, தும்புத்தடியால் அடித்து, இரும்பால் சுட்டு துன்புறுத்தப்பட்டு […]

காளான் புற்றுநோயை 45% ஆல் குறைக்கும்

காளான் புற்றுநோயை 45% ஆல் குறைக்கும்

காளானை (mushroom) உண்பது புற்றுநோய் ஏற்படுவதை சுமார் 45% ஆல் குறைக்கும் என்கிறது அமெரிக்காவின் Pennsylvania State University ஆய்வு ஒன்று. தினமும் இரண்டு நடுத்தர அளவிலான காளானை உண்பது மேற்படி அளவிலான புற்றுநோய் தவிர்ப்புக்கு உதவுமாம். 1966ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்து 17 ஆய்வுகளின் தரவுகளை ஆய்ந்த பின்னரே இந்த கருத்தை மேற்படி ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு 19,500 புற்றுநோய் நோயாளிகளின் தவுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. காளானில் vitamins, […]

Trump Tower வீடு ஒன்று அரை விலைக்கு

Trump Tower வீடு ஒன்று அரை விலைக்கு

போர்த்துக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரரான Cristiano Ronaldo 2015ம் ஆண்டு நியூ யார்க் நகரில் உள்ள Trump Tower என்ற அடுக்குமாடியில் வீடு (condo) ஒன்றை $18.5 மில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தார். அது ரம்ப் சனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னான காலம். ஆனால் ரம்பின் 4 ஆண்டு ஆட்சியின் பின் அவரின் பெயரை கொண்ட சொத்துக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. Ronaldo கொள்வனவு செய்திருந்த வீடும் தற்போது அரை விலைக்கும் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளது. […]