270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின, 90 மரணித்தன

270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின, 90 மரணித்தன

அஸ்ரேலியாவின் Tasmania பகுதியில் மணல் நிறைந்த, ஆழம் குறைந்த கரைக்கு வந்த 270 திமிங்கிலங்கள் (pilot whales) மீண்டும் சுயமாக ஆழ்கடல் செல்லமுடியாது தவிக்கின்றன. அவற்றில் 90 ஏற்கனவே பலியாகி உள்ளன. இதுவரை 25 திமிங்கிலங்களை மீனவரும், அதிகாரிகளும் ஆழ்கடலுக்கு எடுத்து சென்றுள்ளனர். Pilot whale கடல்வாழ் dolphin வகையை சார்ந்தது. இவை 7 மீட்டர் (23 அடி) நீளம் வரை வளரக்கூடியது. முதிர்ந்த இவ்வகை திமிங்கிலம் 3 தொன் எடையை கொண்டிருக்கும். இடருள் உள்ள பெரிய, […]

மலேசியாவின் MM2H திட்டம் இடைநிறுத்தம், சீனர் தவிப்பு

மலேசியாவின் MM2H திட்டம் இடைநிறுத்தம், சீனர் தவிப்பு

வெளிநாட்டினரின் முதலீடுகளை பெறும் நோக்கில் 2002 ஆம் ஆண்டு மலேசியா Malasiya My Second Home (MM2H) என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அத்திட்டப்படி வெளிநாடுகளின் செல்வந்தர் மலேசியாவில் சொத்துக்களை கொள்வனவு செய்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையான நீண்டகால விசா வழங்கப்படும். 2002 ஆம் ஆண்டு முதல் 2018 வரையான காலத்தில் 131 நாடுகளில் இருந்து 43,943 பேர் இந்த MM2H திட்டத்தில் பங்குகொண்டிருந்தனர். அவர்களில் 30% மானோர் சீனர்கள். இவர்கள் சிங்கப்பூரை அண்டிய Johor […]

சர்வதேச வங்கிகள் திருட்டு பண கடத்தலுக்கு உதவின

சர்வதேச வங்கிகள் திருட்டு பண கடத்தலுக்கு உதவின

Deutsche Bank, HSBC, JPMorgan, Barclays போன்ற உலகின் பிரதான வங்கிகள் ஊழல், போதை விற்பனை, திருட்டு போன்ற வழிகள் மூலம் பெறப்படும் பணத்தை ஒரு நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்கு கடத்தும் வேலைகளுக்கு உண்மை தெரிந்தும் உதவின என்கிறது FinCEN (Financial Crime Enforcement Network) விசாரணைகள். 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவின் BuzzFeed என்ற செய்தி நிறுவனம் அமெரிக்காவின் Department of the Treasury கொண்டிருந்த பெரும் தொகை (2,657 files) பண பரிமாற்ற […]

ரம்பின் WeChat தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

ரம்பின் WeChat தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது சீனாவுடனான பொருளாதார மோதலின் ஒரு அங்கமாக TikTok, WeChat ஆகிய smart phone app களை இன்று ஞாயிரு முதல் தடை செய்ய முனைந்தார். அதை எதிர்த்து அமெரிக்காவில் WeChat ஐ பயன்படுத்தும் மக்கள், பெருபாலும் அமெரிக்க சீனர், WeChat Users Alliance என்ற அமைப்பின் கீழ் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். WeChat வழக்கை செவிமடுத்த San Francisco நகரில் உள்ள United States District Court நீதிபதி Laurel Beeler […]

சீனாவை தடுக்க இந்தியா விரைந்து வெங்காய ஏற்றுமதி

சீனாவை தடுக்க இந்தியா விரைந்து வெங்காய ஏற்றுமதி

கடந்த மாதம் இந்தியாவின் கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் பாரிய மழை வீழ்ச்சியை கொண்டிருந்தன. அதனால் அங்கு வெங்காய உற்பத்தி அழிந்து, இந்தியாவில் வெங்காய விலை அதிகரித்து இருந்தது. அதிகரிக்கும் வெங்காய விலையை கட்டுப்படுத்த இந்திய அரசு வெங்காய ஏற்றுமதியை கடந்த திங்கள்கிழமை தடை செய்திருந்தது. முன்னறிவிப்பு இன்றி இந்தியா செய்த ஏற்றுமதி தடையால் பங்களாதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளில் வெங்காய விலை திடீரென பல மடங்கால் அதிகரித்தது. பங்களாதேசத்தில் Tk 40.00 (Taka, பங்களாதேச […]

பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு வரும் திருடப்பட்ட சிலைகள்

பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு வரும் திருடப்பட்ட சிலைகள்

தமிழ்நாட்டின் ஆனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ராஜகோபால சுவாமி ஆலயத்தில் இருந்து 1978 ஆம் ஆண்டு திருடப்பட்ட இராமர், சீதை, அனுமார் சிலைகள் பிரித்தானியாவில் இருந்து தமிழ்நாடு திரும்புகின்றன. இந்த பித்தளை சிலைகள் 15 ஆம் நூற்றாண்டு விஜயநாகரா (Vijayanagara) ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை. நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த சிலைகளின் புகைப்படம் ஒன்று British Antique Dealers’ Association என்ற நூதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் இணையத்தில் இருப்பதை இந்தியாவின் India Pride Project என்ற அமைப்பு கண்டுள்ளது. […]

கரோனா தொற்றியோர் 30 மில்லியன், இந்தியா ஆபத்தில்

கரோனா தொற்றியோர் 30 மில்லியன், இந்தியா ஆபத்தில்

தற்போது உலக அளவில் 30,065,728 பேர் கரோனா தொற்றி உள்ளனர். உலக அளவில் கரோனாவுக்கு மரணித்தோர் தொகை 944,604 ஆக உள்ளது. தற்போது அமெரிக்காவே அதிக கரோனா தொற்றியோரை கொண்டுள்ளது. அங்கு 6.674 மில்லியன் பேர் கரோனா தொற்றி உள்ளனர். அத்துடன் அங்கு 197,615 பேர் பலியாகியும் உள்ளனர். ஆனால் இந்தியாவின் கரோனா தொற்றியோர் தொகை விரைவில் அமெரிக்காவின் கரோனா தொற்றியோர் தொகையை மீறலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் தற்போது 5,118,253 பேர் கரோனா தொற்றி உள்ளனர். […]

சிவாஜி நூதனசாலை ஆனது மோகல் நூதனசாலை

இந்தியாவின் தாஜ் மகாலுக்கு அருகில் கட்டப்படும் Mughal Museum தின் பெயரை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி (Yogi Adityanath) Shivaji Museum என்று மாற்றியுள்ளார். இந்தியாவை ஆக்கிரமித்தோர் hero கள் ஆக முடியாது என்கிறார் யோகி. மேற்படி நூதனசாலைக்கான கட்டுமான வேலைகள் 2016 ஆம் ஆண்டு அப்பொழுது உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் Akhilesh Yadav காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. இந்த நூதனசாலை 6 ஏக்கர் நிலத்தில், $22 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டது. இதில் மோகல் காலத்து […]

எரிந்த கப்பல் அதிகாரி மீது இலங்கை வழக்கு தாக்கல்

எரிந்த கப்பல் அதிகாரி மீது இலங்கை வழக்கு தாக்கல்

இலங்கையின் தென்கிழக்கு கடலில் இந்த மாதம் 3 ஆம் திகதி தீ பற்றிக்கொண்ட New Diamond என்ற VLCC (very large crude carrier) கப்பல் அதிகாரி (captain) மீது இலங்கை அரசு வழக்கு தொடரவுள்ளது. பனாமாவில் Porto Emporios Shipping Inc என்று பதியப்பட்ட, கிரேக்கத்தில் New Shipping Limited என்ற உரிமை நிறுவனத்தை கொண்ட இந்த கப்பல் குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் மசகு எண்ணெய்யை எடுத்து செல்கையில் தீ பற்றி இருந்தது. […]

பனாமா ஆளுநர் பயணித்த காரில் 79 போதை பொதிகள்

பனாமா ஆளுநர் பயணித்த காரில் 79 போதை பொதிகள்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் (Panama) Guna Yala என்ற வடகிழக்கு மாநில ஆளுநர் Erick Martelo பயணித்த காரில் 79 போதை பொதிகள் இருந்தமை அந்நாட்டு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படியில் அவர்கள் கார் ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை நிறுத்தி உள்ளனர். அந்த காரிலேயே 79 பொதிகள் போதை இருந்துள்ளன. அந்த காரில் பயணித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த இருவருள் ஒருவர் Erick Martelo என்ற ஆளுநர். […]