பாகிஸ்தானின் புதிய ஏவுகணை பரிசோதனை

பாகிஸ்தான் தாம் இன்று வியாழன் 290 km தூரம் சென்று தாக்கக்கூடிய நிலத்தில் இருந்து நிலத்துக்கான (surface-to-surface) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக கூறியுள்ளது. இந்த ஏவுகணை பல வகை குண்டுகளை காவி செல்லும் தரம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. . பாகிஸ்தானின் இந்த பரிசோதனை தொடர்பாக தமக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது. . Ghaznavi என்ற இந்த ஏவுகணை பரிசோதனை இரவு நேரத்திலேயே செய்யப்பட்டுள்ளது. . கடந்த மே மாதம், இந்தியாவில் தேர்தல்கள் […]

பிரித்தானியாவில் பாராளுமன்றம் இடைநிறுத்தம்

அண்மையில் பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றிக்கொண்ட Boris Johnson திடீரென பிரித்தானியாவின் பாராளுமன்றை இடைநிறுத்தம் செய்து கொண்டதை எதிரணிகள் வன்மையாக கண்டிக்கின்றன. இணக்கம் எதுவும் இன்றி (no-deal Brexit) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நடைமுறை செய்யவே பிரதமர் இவ்வாறு செயல்பட்டதாக எதிரணிகள் கூறுகின்றன. . நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த திட்டப்படி செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 5 கிழமைகள் பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்படும். . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற விரும்பாத […]

மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வு

இலங்கையின் வடமேற்கு பகுதியான மன்னாரை அண்டிய கடலில் எண்ணெய் அகழ்வு பணிகளில் இலங்கை ஈடுபடவுள்ளது. இந்த பணிகளை செய்யும் உரிமையை இலங்கை அரசு பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனத்துக்கும், நோர்வேயின் Equinor நிறுவனத்துக்கும் வழங்கி உள்ளது. . 2023 ஆம் ஆண்டளவில் எண்ணெய் அகழ்வு செயல்பாட்டுக்கு வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. . தற்போது எண்ணெய் உற்பத்தி அற்ற நாடான இலங்கை 2018 ஆம் ஆண்டில் $4.15 பில்லியன் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. […]

ஆர்பாட்டங்களால் பாதிப்புறும் ஹாங்காங் பொருளாதாரம்

ஹாங்காங் நகரில் சுமார் 80 நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது அந்த நகரின் பொருளாதாரத்தை பாதிக்க ஆரம்பித்துள்ளது. . Golding Financial Holdings என்ற முதலீட்டு நிறுவனம் ஹாங்காங் நகரில் U$1.4 பில்லியனுக்கு வர்த்தக நிலம் ஒன்றை கொள்வனவு செய்யவிருந்தது. அனால் அண்மையில் அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அந்த நிறுவனம் தனது திட்டத்தை கைவிட்டு உள்ளது. . அங்கு குடியிருப்பு வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்கான கொள்வனவு பதிவுகள் சுமார் 24% ஆல் வீழ்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. […]

G7 அமைவிடத்தில் ஈரானின் வெளியுறவு அமைச்சர்

Biarritz என்ற பிரென்சு நகரில், அந்நாட்டின் ஜனாதிபதி Macron தலைமையில், தற்போது G7 அமர்வு இடம்பெறுகிறது. அங்கு அமெரிக்காவின் ரம்ப் உட்பட கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் உள்ளனர். . வியப்படையும் வகையில், முன்னறிவிப்பு எதுவும் இன்றி, ஈரானின் வெளியுறவு அமைச்சரும் தற்போது Biarritz நகரம் சென்றுள்ளார். ஈரானின் விமானம் ஒன்றும் Biarritz விமான நிலையத்தில் காணப்படுள்ளது. . ஈரானின் வெளியுறவு அமைச்சர் Mohammed Javad Zarif அங்கு ஏன் சென்றார் […]

தொடரும் அமெரிக்க-சீன வர்த்தக போர்

அமெரிக்காவின் ரம்ப் ஆட்சிக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்தும் உக்கிரம் அடைந்து வருகின்றது. . முன்னர் ரம்ப் தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அறவிடப்படும் மேலதிக இறக்குமதி வரியை (tariffs) மேலும் அதிகரிக்கவுள்ளதா கூறியிருந்தார். அதற்கு பதிலாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறைக்குமதி செய்யப்படும் $75 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அறவிட உள்ளதாக இன்று வெள்ளி கூறியுள்ளது. […]

Air India சேவைக்கு எரிபொருள் வழங்கல் இடைநிறுத்தம்

இந்தியாவின் அரச விமான சேவையான Air India விமான சேவைக்கு தேவையான எரிபொருளை வழங்கும் அரச எரிபொருள் நிறுவனம் (OMC) இன்று 6 விமான நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கலை இடைநிறுத்தம் செய்துள்ளது. ஏற்கனவே செய்துகொண்ட கொள்வனவுகளுக்கு பணம் செலுத்தாமையே காரணம் என்று கூறப்படுகிறது. . Kochi, Pune, Patna, Ranchi, Vizag, Mohali ஆகிய விமான நிலையங்களுக்கே எரிபொருள் வழங்கல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்த இடைநிறுத்தம் Air India விமான சேவையையே பாதிக்கும். ஏனைய சேவைகள் தொடர்ந்தும் […]

டென்மார்க்கையும் வசைபாடும் ரம்ப்

தனக்கு ‘ஆமா’ போடாதவர்கள் எல்லோரையும் வசைபாடும் இயல்பு கொண்ட ரம்ப் தற்போது டென்மார்க்கையும் (Denmark), அதன் பிரதமர் Mette Frederiksen ஐயும் வசைபாட ஆரம்பித்து உள்ளார். டென்மார்க்கின் ஒரு அங்கமான கிறீன்லாண்டை (Greenland) அமெரிக்கா கொள்வனவு செய்யலாம் என்ற ரம்பின் அண்மைய கருத்தை டென்மார்க் உதாசீனம் செய்ததே ரம்பின் கொதிப்புக்கு காரணம். . டென்மார்க்கின் பிரதமர் ரம்பின் கருத்தை ‘absurd’ என்று கூறி நிராகரித்தார். கொதித்துப்போன ரம்ப் பிரதமரை ‘nasty’ என்று வர்ணித்தார். பிரதமர் மட்டுமன்றி, அந்நாட்டின் […]

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல்கள்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் காஸ்மீர் பகுதியில் இன்று செவ்வாய் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த மோதல்களுக்கு பலர் பலியாகி உள்ளனர். ஆனால் மோதல்கள் தொடர்பாக இரு தரப்பும் முரண்பட்ட தரவுகளை வெளியிட்டு உள்ளன. . இந்தியா நடாத்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பக்கத்தில் 3 பொதுசனம் பலியானதாக பாகிஸ்தான் கூறி உள்ளது. அத்துடன் தாம் 6 இந்திய படையினரை சுட்டு கொன்றதாகவும் பாகிஸ்தான் கூறி உள்ளது. இந்தியா இதை ஒரு பொய் செய்தி என்று கூறியுள்ளது. . காஸ்மீருக்கு நடைமுறையில் […]

அமெரிக்கா புதிய ஏவுகணை சோதனை

தாம் புதிய வகை ஏவுகணை ஒன்றை ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்ததாக இன்று திங்கள் அமெரிக்காவின் பென்ரகன் அறிவித்து உள்ளது. கலிபோர்னியாவின் San Nicolas தீவில் இருந்து ஏவப்பட்ட இந்த சோதனை ஏவுகணை 500 km சென்று சோதனை குறியை தாக்கியதாக கூறப்படுகிறது. . 1987 ஆம் ஆண்டு றேகனும், கொர்பசோவும் செய்துகொண்ட INF என்ற இணக்கப்படி 500 km முதல் 5,500 km தூரம்வரை பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வது தடை செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஷ்யா, […]

1 11 12 13 14 15 33