தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

இலங்கையின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் சீனா சூரிய மற்றும் காற்றாடி மூலமான மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இந்தியா. ஏற்கனவே இந்திய-ஜப்பானிய கூட்டுக்கு வழங்கி இருந்த கொழும்பில் கட்டப்படவிருந்த கிழக்கு கொள்கலன் துறை (ECT, East Container Terminal) உரிமையை இலங்கை பறித்து இருந்தமையும் இந்தியாவுக்கு விசனத்தை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் சீனா இந்தியாவை அண்டிய தீவுப்பகுதியில் செயற்படுவது விசனத்தை மேலும் உக்கிரம் செய்துள்ளது. சீனாவின் Sinosar-Etechwin என்ற கூட்டு நிறுவனமே […]

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் உள்ளனர். ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் Glacier (இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது. பெருக்கெடுத்த ஆறு சிறிய அணை ஒன்றையும் உடைத்துள்ளது. அதனால் பல இடங்களில் ஆறு பல அடிகள் உயரத்தில் வேகமாக பாய்ந்து ஆற்றோரம் இருந்த வீடுகளையும் உடைத்துள்ளது. Rishiganga Hydroelectric என்ற மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய […]

சீனாவின் இரண்டாவது கரோனா மருந்துக்கும் அனுமதி

சீனாவின் இரண்டாவது கரோனா மருந்துக்கும் அனுமதி

சீனா அந்நாட்டில் தயாரிக்கப்படும் இரண்டாம் கரோனா தடுப்பு மருந்தான CoronaVac மருந்தையும் மக்களுக்கு ஏற்ற வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கி உள்ளது. இந்த மருந்து Sinovac Biotech Ltd என்ற சீன நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகிறது. சீனாவில் ஏற்கனவே Sinopharm என்ற சீன நிறுவனம் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தான SinoVac க்கு கடந்த ஜூன் மாதம் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த மருந்து ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் ஏற்கனவே மக்களுக்கு ஏற்றப்படுகிறது. அவற்றுள் சீனா, […]

கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் மேற்கு

கரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை கட்டுப்படுத்தும் மேற்கு

கரோனா தடுப்பு மருந்தை இந்தியா, தென் ஆபிரிக்கா ஆகிய வளர்முக நாடுகள் உற்பத்தி செய்வதை மருந்துகளுக்கான உரிமைகளை கொண்ட அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்ற செல்வந்த மேற்கு நாடுகள் தடுப்பதாக கூறப்படுகிறது. மேற்படி தடுப்பு மருந்துகளை ஆய்வுகள் மூலம் மேற்கின் நிறுவனங்கள் தயாரித்து இருந்தாலும், அந்த மருந்துகளுக்கான IP உரிமைகளை (Intellectual Property Rights) தற்காலிகமாக தவிர்த்து தயாரிப்பு வசதிகள் கொண்ட அனைத்து நாட்டு நிறுவனங்களையும் உற்பத்தி செய்ய அனுமதித்தால் விரைவில் வளர்முக நாடுகளும், […]

தாய்வானில் 6 பேர் கைது, இலங்கை மாணவர் ஊழல் காரணம்

தாய்வானில் 6 பேர் கைது, இலங்கை மாணவர் ஊழல் காரணம்

தாய்வானில் Kang Ning பல்கலைக்கழக President உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மீது இலங்கை மாணவரை தாய்வான் அழைத்து ஊழல் செய்ய முனைந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. 2017ம் ஆண்டு 3 தாய்வான் முகவர்கள் இலங்கை வந்து தாய்வானில் இலவசமாக படிக்க மாணவர்களை தேடியுள்ளனர். மாணவர்கள் தமது விமான செலவுக்கும், விசா செலவுக்கும் மட்டும் $1,000 செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு இலவச பல்கலைக்கழக அனுமதியும், internship தொழிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். […]

பங்களாதேச பிரதமர் அணியின் சட்டவிரோதங்கள்?

பங்களாதேச பிரதமர் அணியின் சட்டவிரோதங்கள்?

கடந்த திங்கள் கட்டாரை (Qatar) தளமாக கொண்ட Al Jazeera செய்தி சேவை வெளியிட்ட “All the Prime Minister’s Men” என்ற தலைப்பிட்ட புலனாய்வு ஆவணத்தில் தற்போதை பங்களாதேச பிரதமரின் அணி செய்யும் சட்டவிரோதங்கள் விபரிக்கப்பட்டு உள்ளன. அரசுடன் நெருக்கமாக உள்ள உயர் அதிகாரிகள் செய்யும் கள்ள கடவுச்சீட்டு தயாரித்தல், அரச குத்தகைகள் மூலம் இலாபம் பெறல், தொழில்வாய்ப்புகளில் மோசடி செய்தல் போன்ற விரோதங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆவணத்துக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகளை […]

ரஷ்யாவின் கரோனா மருந்து 91.6% வெற்றிகரமானது

ரஷ்யாவின் கரோனா மருந்து 91.6% வெற்றிகரமானது

ரஷ்யாவின் Sputnik V என்ற கரோனா தடுப்பு மருந்து 91.6% வெற்றிகரமானது என்று கூறியுள்ளது பிரித்தானியாவை தளமாக கொண்ட The Lancet என்ற மருத்துவ ஆய்வு வெளியீடு. அதனால் இதுவரை ரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சந்தேகம் கொண்டிருந்த மேற்கு தற்போது Sputnik V யின் தரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை வெளிவந்த மேற்படி ஆய்வு Sputnik V மீதிருந்த சந்தேகத்தை விலக்கி உள்ளது என்று Ian Jones என்ற University of Reading ஆய்வாளர் கூறியுள்ளார். […]

இலங்கையில் நீதி மீது தாக்குதல் என்கிறது HRW

இலங்கையில் நீதி மீது தாக்குதல் என்கிறது HRW

இன்று திங்கள் வெளியிட்ட 93 பக்கங்களை கொண்ட அறிக்கை ஒன்றில் தற்போதைய இலங்கை அரசு நீதி மீது தாக்குதல் செய்கிறது என்று கூறியுள்ளது Human Rights Watch அமைப்பு. Open Wounds and Mounting Dangers: Blocking Accountability for Grave Abuses in Sri Lanka என்ற தலைப்பிட்ட அறிக்கை கோத்தபாய அரசின் நடவடிக்கைகளை ஆராய்ந்து உள்ளது. குறிப்பாக 7 மனித உரிமைகள் வழக்குகளை தற்போதைய அரசு கையாளும் முறை HRW அமைப்பால் கண்டிக்கப்பட்டு உள்ளன. […]

மயன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

மயன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

மயன்மாரில் (பர்மா) இன்று திங்கள் காலை இடம்பெறும் நிகழ்வுகள் அங்கு மீண்டும் ஒரு இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இடம்பெறுகிறதா என்று கருத வைக்கிறது. அந்நாட்டின் தலைவி அங் சன் சு கியும் (Aung San Suu Kyi) பல ஆளும் கட்சி அமைச்சர்களும் இன்று திங்கள் காலை இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். National League for Democracy (NLD) என்ற ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு மேற்படி தகவலை வழங்கி உள்ளார். […]

விசனம் கொண்ட மோதி உழவர் மீது பாச்சல்

விசனம் கொண்ட மோதி உழவர் மீது பாச்சல்

டெல்லியில் தங்கியிருந்து சுமார் இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் செய்துவரும் உழவர் மீது விசனம் கொண்ட இந்திய பிரதமர் இன்று ஞாயிற்றுக்கிழமை வசைபாடி உள்ளார். ஜனவரி 26ம் திகதி ஆர்பாட்டகாரர் Red Ford என்ற கட்டடத்துள் நுழைந்தது இந்திய தேசிய கொடிக்கு அவமானம் என்றும், நாடு கவலை அடைந்துள்ளது என்றும் மோதி தனது வானொலி உரையில் கூறியுள்ளார். அண்மையில் மோதி அரசு நடைமுறை செய்யவிருந்த அறுவடைகளை கொள்வனவு செய்யும் முறையை மாற்றும் சட்டங்களை உழவர்கள் எதிர்த்து வருகின்றனர். முன்னைய முறைப்படி அறுவடை காலத்தில் அரசின் கட்டுப்பாடில் உள்ள அமைப்பு மிதமான அறுவடைகளை […]